search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்: முந்தைய அபராதத்தை செலுத்த தவறியதற்காக ரஷியா நடவடிக்கை
    X

    கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்: முந்தைய அபராதத்தை செலுத்த தவறியதற்காக ரஷியா நடவடிக்கை

    • 2021-ல் ரஷியாவிற்கு எதிரான கருத்துக்களை நீக்க மறுத்ததால் அபராதம் விதிப்பு
    • 2 மாதங்களுக்குள் கூகுள் அபராத தொகையை செலுத்த வேண்டும்

    இணைய தகவல் தேடலில் முன்னணியில் இருக்கும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்திற்கு, ரஷியாவின் ஏகபோக எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பு அறிவித்திருந்த முந்தைய அபராதத்தை செலுத்த தவறியதற்காக, ரஷிய நீதிமன்றத்தால் சுமார் ரூ. 400 கோடி ($47 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பெடரல் ஆன்டிமோனோபோலி சர்வீஸ் (FAS) எனும் அமைப்பு கூகுள், யூடியூப் வீடியோ ஹோஸ்டிங் சேவை சந்தையில் அதன் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியது என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும், மேலும் குறிப்பான விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, கூகுள், தனது அடுத்த நடவடிக்கையை தீர்மானிக்கும் முன் ரஷியாவின் அதிகாரப்பூர்வ முடிவை முதலில் ஆராய போவதாக தெரிவித்திருக்கிறது. பெடரல் ஆன்டிமோனோபோலி சர்வீஸ் அமைப்பின்படி, இந்த அபராதம் விதிக்கப்பட்ட 2 மாதங்களுக்குள் கூகுள் அபராத தொகையை செலுத்த வேண்டும்.

    சமீபத்திய மாதங்களில் கூகுளின் ரஷிய துணை நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தொடர் அபராதங்களில் இது மேலும் ஒன்றாக அதிகரிக்கிறது.

    முன்னதாக 2021 டிசம்பரில், சட்டவிரோதமாகக் கருதப்படும் உள்ளடக்கத்தை அகற்ற தவறியதற்காக ரஷிய நீதிமன்றம், ஆல்ஃபபெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான கூகுளுக்கு ரூ.800 கோடிக்கு ($98 மில்லியன்) மேல் அபராதம் விதித்திருந்தது.

    ரஷியாவால், உக்ரைனில் தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்த விஷயங்களுக்காக இந்த அபராதங்கள் இடம் பெறுகின்றன.

    ஆன்லைன் தளங்களின் மீது அதிக கட்டுப்பாட்டை செலுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது. இதில், தனது நாட்டின் உள்நாட்டு நிறுவனங்களை மேற்கத்திய போட்டியாளர்களுக்கு போட்டியாக மாற்றுவதற்கான ஆதரவளிப்பதும் அடங்கும்.

    ரஷிய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் ஊடகங்களை உலகளவில் தடுத்துள்ள யூடியூப், ரஷியாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்புகளிடமிருந்தும், அந்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்தும் சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×