search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இது போருக்கான நேரமல்ல: கூட்டறிக்கையில் வலியுறுத்திய பிரதமர் மோடி
    X

    இது போருக்கான நேரமல்ல: கூட்டறிக்கையில் வலியுறுத்திய பிரதமர் மோடி

    • ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அந்நாட்டு இசைக்கலைஞர்கள் நமது தேசிய கீதத்தை இசைத்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    வியன்னா:

    ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு இசைக்கலைஞர்கள் நமது தேசிய கீதத்தை இசைத்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    அந்நாட்டு சான்சிலர் மாளிகைக்கு வந்த பிரதமர் மோடியை சான்சிலர் கார்ல் நெஹமர் வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு உறவு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    எனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் ஆஸ்திரியா வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இது போருக்கான நேரமல்ல என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட மனித குலம் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசித்தோம்.

    பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் சர்வதேச சோலார் ஒத்துழைப்பு கூட்டணியுடன் இணைந்து ஆஸ்திரியா பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

    பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் ஏற்கமுடியாது. அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசிய கார்ல் நெஹ்மர், உக்ரைன் மீது ரஷியா நடத்தும் தாக்குதல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். இந்தியா ஒரு செல்வாக்கு பெற்ற நாடு. ரஷியா-உக்ரைன் இடையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என தெரிவித்தார்.

    Next Story
    ×