search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமைதி பேச்சுவார்த்தைக்கு தூது விடும் புதின்: இந்தியாவுக்கு நேரடி அழைப்பு
    X

    அமைதி பேச்சுவார்த்தைக்கு தூது விடும் புதின்: இந்தியாவுக்கு நேரடி அழைப்பு

    • ரஷியா சென்ற நிலையில் பிரதமர் மோடி உக்ரைன் சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
    • உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்ப்பு.

    மாஸ்கோ:

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்துவருகின்றன. அமெரிக்காவும் உதவி வருகிறது. இதனால் ரஷியாவிடம் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்த நாடுகளால் பேச முடியவில்லை.

    சீனா ரஷியாவுடன் இணக்கமாக உள்ளது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை என வரும்போது விலகி நிற்கிறது. இந்தியா உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் நட்பு நாடாக விளங்குகிறது. சமீபத்தில் ரஷியாவிற்கு சென்ற பிரதமர் மோடி, உக்ரைனுக்கும் சென்றார்.

    இதனால் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன.

    இதற்கிடையே, பிரதமர் மோடி ரஷியா, உக்ரைன், போலந்து சுற்றுப்பயணத்தை முடிக்கு கொண்டு இந்தியா திரும்பிய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் டெலிபோனில் பேசினார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைன் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும்.

    இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் போரின் முதல் வாரங்களில் ரஷியா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே எட்டப்பட்ட பூர்வாங்க ஒப்பந்தம் ஒருபோதும் செயல்படுத்தப்படாது. அவை பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையும் என தெரிவித்தார்.

    Next Story
    ×