என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் வருகை 86 சதவீதம் குறைவு
- இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, கனடா வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைவு.
- 16.4 பில்லியன் அமெரிக்க டாலர் கனடா-விற்கு வருவாய் ஈட்டிய நிலையில் தற்போது குறையத் தொடங்கியது.
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியா - கனடா இடையேயான உறவில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இங்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவு எவ்வாறு மேம்படும் என்பது குறித்து என்னால் சொல்ல முடியாது" என தெரிவித்தார். கடந்த 2022-ன் கடைசி 3 மாதங்களில் கனடாவுக்குச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 940 ஆக இருந்த நிலையில், 2023-ன் கடைசி 3 மாதங்களில் இந்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 910 ஆக சரிந்ததாக கனடா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கனடா செல்லும் இந்திய மாணவர்கள் 86 சதவீதம் குறைந்துள்ளனர் என தெரிவித்தார்.
இந்திய மாணவர்களின் வருகை காரணமாக கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் பொருளீட்டியதாக தெரிவித்த அமைச்சர், 16.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வருவாய் வந்த நிலையில், அது தற்போது குறையத் தொடங்கியது எனக் கூறினார். இந்தியா - கனடா இடையேயான உறவில், ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக இந்திய மாணவர்கள் கனடா செல்வது குறைந்துள்ள அதேநேரத்தில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க கனடா அரசு சில நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.