என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
இஸ்ரேல் அதிபருடன் சந்திப்பு: பிணைக்கைதிகள் விடுதலையை வரவேற்ற பிரதமர் மோடி
- உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர் ஐசக் எர்சோகை சந்தித்தார்.
- மேலும், பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
துபாய்:
உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இதற்கிடையே, உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் 2028-ம் ஆண்டில் COP33 உச்சி மாநாட்டை நடத்த இந்தியா ஆவலாக உள்ளது என குறிப்பிட்டார்.
இந்நிலையில், உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர் ஐசக் எர்சோகை சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இதையடுத்து, கடந்த அக்டோபர் 7-ம் தேதி பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதை வரவேற்றார் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.