search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் 154 வீடுகள் - பயனாளிகளிடம் ஒப்படைத்தார் ஜெய்சங்கர்
    X

    இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் 154 வீடுகள் - பயனாளிகளிடம் ஒப்படைத்தார் ஜெய்சங்கர்

    • மத்திய மந்திரி ஜெய்சங்கர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார்.
    • இலங்கையில் பால் உற்பத்திதுறை மற்றும் உர உற்பத்தியை மேம்படுத்த இந்தியாவின் ஆதரவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கொழும்பு:

    பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக புதிய அரசு அமைந்த பிறகு முதல் முறையாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இலங்கை சென்றார். கொழும்பு விமான நிலையத்தில் அவரை இலங்கை மந்திரி தாரக பால சூரியா, கிழக்கு மாகாண கவர்னர் தொண்டமான் மற்றும் பலர் வரவேற்றனர்.

    பின்னர் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்தும், தமிழக மீனவர்கள் விவகாரம், இலங்கையில் இந்திய நிறுவனம் முதலீடு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும், இடையே எரிசக்தி துறை தொடர்பான கூட்டுத்திட்டத்தை விரைவு படுத்துவது தொடர்பாகவும், இலங்கையில் பால் உற்பத்திதுறை மற்றும் உர உற்பத்தியை மேம்படுத்த இந்தியாவின் ஆதரவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.


    மேலும் இலங்கையில் இந்திய நிதி உதவியுடன் இந்தியா-இலங்கை இடையே ரூ. 50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.

    இந்திய அரசின் உதவியுடன் இலங்கை கண்டி, மாத்தறை உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள 154 வீடுகளை ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் ஜெய்சங்கர் பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே, வெளியுறவு துறை மந்திரி அலி சப்ரி உள்ளிட்டவர்களையும் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

    இலங்கையில் உள்ள தமிழ் அமைப்பு தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

    Next Story
    ×