என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி: அமெரிக்காவை எச்சரித்த ரஷியா
- ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளதால் உக்ரைன் அனுமதி.
- அதிபர் பதவியில் இருந்து விலக இருக்கும் நிலையில் ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளதாக தகவல்.
ரஷியா- உக்ரைன் இடையில் சண்டை நடைபெற்று ஆயிரம் நாட்களை தாண்டியுள்ளது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை.
உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டது.
ஆனால் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க தடைவிதித்திருந்தது. இதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரக்தி அடைந்தார். வடகொரியா வீரர்கள் தாக்கும் வரை காத்திருப்பீர்களா? என கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் ஆதரவு வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார். இதனால் ஜனவரி 20-ந்தேதி ஜோ பைடன் அதிபர் பதவியில் இருந்து வெளியேற இருக்கிறார்.
அதற்கு முன்னதாக உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த ஜோ பைடன் உத்தரவிட்டதாக நேற்று செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும். இதனால் தற்போது இருப்பதை விட சர்வதேச அளவில் பதற்றத்தை இந்த நடவடிக்கை இன்னும் அதிகரிக்கும் என புதின் மாளிகை செய்தி தொடரப்ாளர் தெரிவித்துள்ளார்.
மோதலின் தன்மை வியத்தகு முறையில் மாற்றமடையும். அதன் அர்த்தம் நேட்டோ நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுடன் போர் நடத்துகிறது என்பதாகும் என புதின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.