என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
மொசாம்பிக் கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து- 90க்கும் மேற்பட்டோர் பலி
- விபத்து நடந்த இடத்தில் இருந்து 5 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
- படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்படுகிறது.
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு மொசாம்பிக் குடியரசு. மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில் தற்காலிக படகு ஒன்று மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மீன்பிடி படகு ஒன்றில் சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நெருங்கியபோது படம் மூழ்கியுள்ளது.
இதுகுறித்து நம்புலாவின் மாநிலச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ கூறுகையில்," படகில் அதிகம் பேர் பயணித்ததாலும், படகும் அதிகம் பேர் ஏற்றிச் செல்லக்கூட நிலையில் இல்லை என்பதாலும் படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களில் பல குழந்தைகளும் உள்ளடங்குவர். சம்பவ இடத்தில் இருந்து 5 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், பலரை தேடி வருகின்றனர். கடல் சீற்றம் காரணமாக தேடும் பணி கடினமாக உள்ளது.
காலரா பற்றிய தவறான தகவல் பரவியதை அடுத்து, அதனால் ஏற்பட்ட பீதியின் காரணமாக பெரும்பாலான பயணிகள் படகு மூலம் தப்பிக்க முயன்றனர்" என்றார்.
படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.