search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஜிம்பாப்வேயில் நடுவானில் விமானம் வெடித்து 6 பேர் பலி: இந்திய தொழில் அதிபர் மகனுடன் உயிரிழந்த சோகம்
    X

    ஜிம்பாப்வேயில் நடுவானில் விமானம் வெடித்து 6 பேர் பலி: இந்திய தொழில் அதிபர் மகனுடன் உயிரிழந்த சோகம்

    • ஹர்பால் தனது மகன் மற்றும் நண்பர்களுடன் தலைநகர் ஹராரேவில் இருந்து முரோவா நகருக்கு செஸ்னா 206 ரக விமானத்தில் புறப்பட்டார்.
    • விபத்தில் உயிரிழந்த தொழில் அதிபர் ஹர்பால் ரந்தாவா 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனியார் பங்கு நிறுவனமான ஜெம் ஹோல்டிங்சின் நிறுவனர் ஆவார்.

    முரோவா:

    ஜிம்பாப்வே நாட்டின் முரோவா நகரில் உள்ள வைர சுரங்கத்தின் உரிமையாளர் ஹர்பால் ரந்தாவா. இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபரான இவர், தங்கம், நிலக்கரி, நிக்கல், தாமிரம் ஆகியவற்றைச் சுத்திகரிக்கும் ரியோசிம் என்ற சுரங்க நிறுவனத்தின் உரிமையாளர். ஹர்பால் தனது மகன் மற்றும் நண்பர்களுடன் தலைநகர் ஹராரேவில் இருந்து முரோவா நகருக்கு செஸ்னா 206 ரக விமானத்தில் புறப்பட்டார்.

    முரோவா நகர் அருகே சென்று கொண்டு இருந்தபோது, விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக நடுவானிலேயே விமானம் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்தில் உயிரிழந்த தொழில் அதிபர் ஹர்பால் ரந்தாவா 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனியார் பங்கு நிறுவனமான ஜெம் ஹோல்டிங்சின் நிறுவனர் ஆவார். இவருடன் மரணமடைந்த அவரது மகனுக்கு 22 வயதே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×