search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அபுதாபியில் இந்து கோவில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.. லைவ் அப்டேட்ஸ்
    X

    அபுதாபியில் இந்து கோவில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.. லைவ் அப்டேட்ஸ்

    • பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அமீரகம் சென்றுள்ளார்.
    • அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைக்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அபுதாபியில் இந்திய சமூகத்தினர் கலந்து கொண்ட பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    இதைத் தொடர்ந்து இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பாரத் மார்ட் வணிக மையத்தை திறந்து வைத்தார். இதோடு, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார்.

    Live Updates

    • 14 Feb 2024 6:28 PM IST

      அபுதாபியில் உள்ள சுவாமி நாராயண கோவிலுக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி

    • 14 Feb 2024 6:27 PM IST

      27 ஏக்கர் பரப்பளவில் சுவாமி நாராயண கோவில் கட்டப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு இந்த கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

    • 14 Feb 2024 6:22 PM IST



    • 14 Feb 2024 6:16 PM IST

      அபுதாபியில் திறந்து வைக்கப்பட இருக்கும் இந்து கோவில் பண்டைய கால வழிமுறைகள் மற்றும் அதிநவீன முறைகளை ஒன்றிணைத்து கட்டப்பட்டு இருக்கிறது.

    • 14 Feb 2024 6:14 PM IST

      பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கும் கோவில், அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவில் ஆகும்.

    • 14 Feb 2024 6:08 PM IST

      "இந்த நாளுக்காக நீண்ட காலம் காத்திருந்தோம். இங்கு வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று அமீரகத்துக்கான இலங்கை தூதர் உதய இந்திரரத்னா தெரிவித்துள்ளார்.

    • 14 Feb 2024 6:05 PM IST

      இந்து கோவில் திறப்பு விழாவை ஒட்டி பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிகளவில் வருகை தந்துள்ளனர்.

    Next Story
    ×