search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷிய அதிபர் தேர்தலில் புதின் அமோக வெற்றி: 88 சதவீத வாக்குகள் பெற்றார்
    X

    ரஷிய அதிபர் தேர்தலில் புதின் அமோக வெற்றி: 88 சதவீத வாக்குகள் பெற்றார்

    • ரஷியாவை அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெருமையை பெறுகிறார்.
    • சோவியத் ரஷியா உடைந்த பிறகு அதிக வாக்குகள் பெற்ற அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    ரஷியாவில் அதிபருக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.

    இதன்மூலம் ரஷியா வரலாற்றில் அதிக வருடம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன்னதாக ஜோசப் ஸ்டாலின் ரஷியாவை அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

    மேலும், சோவியத் ரஷியா உடைந்த பிறகு அதிக வாக்குகள் பெற்ற அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    உக்ரைனுக்கு எதிராக இரண்டு வருடங்கள் சண்டை நடைபெற்று வருவது, எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்தது உள்ளிட்ட சம்பவங்கள் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டிய புதின் வெற்றி பெற்றுள்ளார்.

    ரஷியாவில் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறவில்லை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

    தேர்தல் நடைபெற்றபோது உக்ரைன் ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என புதின் தெரிவித்துள்ளார்.

    எதிர்க்கட்சி தலைவர்களை போட்டியிடாமல் தடுத்தல், அடக்குமுறை என புதின் மேல் குற்றச்சாட்டு எழுந்த நிலையிலும் ரஷியா மக்கள் திரளாக திரண்டு அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×