search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் அணுகுண்டை பயன்படுத்த திட்டமிடுகிறது- ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    ரஷிய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு

    உக்ரைன் அணுகுண்டை பயன்படுத்த திட்டமிடுகிறது- ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு

    • உக்ரைனில் நிலைமை கட்டுப்பாட்டை இழந்து மிகவும் மோசமாக சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கை
    • ஐரோப்பாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய திறன் ரஷியாவுக்கு மட்டுமே உள்ளது ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    ரஷியா மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர்கள் உக்ரைன் விவகாரம் குறித்து தொலைபேசியில் உரையாடினர். ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சர், செர்ஜி ஷோய்கு, உக்ரைன் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலசை தொலைபேசியில் அழைத்தார்.

    அப்போது, கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தும் அணுகுண்டை போரில் உக்ரைன் பயன்படுத்தும் என்று ரஷியா கவலைப்படுவதாக ஷோய்கு வாலஸிடம் தெரிவித்தார்.

    ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் ரஷியா வழங்காத போதிலும், உக்ரைனில் நிலைமை கட்டுப்பாட்டை இழந்து மிகவும் மோசமாக சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷியா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பிரிட்டன் தரப்பு மறுத்துள்ளது.

    இதேபோல் ரஷியாவின் கவலை மற்றும் குற்றச்சாட்டை உக்ரைனும் மறுத்துள்ளது. ஐரோப்பாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய திறன் ரஷியாவுக்கு மட்டுமே உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    Next Story
    ×