என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சவுதி அரேபியா
- சவுதி அரேபியா செல்ல விசா பெற இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
- போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்க சவுதி அரேபியா முடிவு
ரியாத்:
சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்வதற்கான விசா பெற இந்திய குடிமக்கள் இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.
இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற இரு நாடுகளின் முயற்சியின் ஒரு பகுதியாக சவுதி விசாவிற்கு போலீஸ் அனுமதி ஆவணம் தேவையில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகள் மற்றும் மூலோபாய கூட்டுறவைக் கருத்தில் கொண்டு, போலீஸ் அனுமதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
- முகமது பின் சல்மான் நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
- பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.
ரியாத் :
உலகில் இப்போதும் மன்னராட்சி நடந்து வரும் சில நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அங்கு 86 வயதான சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மன்னராக உள்ளார்.
அவருக்கு அடுத்து அதிகாரமிக்க தலைவராக அந்த நாட்டின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் உள்ளார். இவர் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி பாலின சமுத்துவத்தை ஏற்படுத்தியதன் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இந்த நிலையில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சவுதி அரேபியாவின் பிரதமராக மன்னர் சல்மான் நியமித்துள்ளார். அதோடு நாட்டின் மந்திரிசபையையும் மன்னர் மாற்றியமைத்துள்ளார்.
அதன்படி முகமது பின் சல்மானின் இளைய சகோதரரும், இளவரசருமான காலித் பின் சல்மான், ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் அவர் துணை ராணுவ மந்திரியாக இருந்து வந்தார்.
இதனிடையே பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தாலும், மந்திரிசபை கூட்டங்களுக்கு மன்னர் சல்மான்தான் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதிபராக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.
- சவுதி பட்டத்து இளவரசர்முகமது பின் சல்மானை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தார்.
ரியாத்:
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் முதல் நாடாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் வந்தடைந்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியா புறப்பட்டார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு ஜோ பைடன் வந்தடைந்தார். அவருக்கு அரசுமுறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தார். அதிபராக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த சந்திப்பின் போது கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், முகமது பின் சல்மானை அதிபர் ஜோ பைடன் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரபல கம்பெனி பெயரில் இந்திய தம்பதிகள் மோசடியை செய்து வந்தனர்.
- குறிப்பாக மின் வினியோகம் செய்யும் கம்பெனியை ஏமாற்றியதாக அந்த நிறுவனம் புகார் தெரிவித்தது.
ஜோகன்ஸ்பர்க்:
சவூதி அரேபியாவில் வசித்து வரும் இந்திய தம்பதிகளான முகமது-ரசீசா மொய்தீன் மற்றும் வெர்னன்-ஆராதனா ஆகியோர் பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.
பிரபல கம்பெனி பெயரில் அவர்கள் இந்த மோசடியை செய்து வந்தனர். குறிப்பாக மின் வினியோகம் செய்யும் கம்பெனியை ஏமாற்றியதாக அந்த நிறுவனம் புகார் தெரிவித்தது.
இதையடுத்து ஜோகன்ஸ்பர்க் மற்றும் துர்பான் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து எலெக்ரானிக் பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- ஹஜ் புனித பயண சடங்குகளில் பங்கேற்க 10 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா குறைந்ததால் மெக்காவில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
மெக்கா:
இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மெக்காவில் ஹஜ் புனித பயணத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மெக்காவில் நேற்று தொடங்கிய ஹஜ் புனித பயண சடங்குகளில் பங்கேற்க 10 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் மெக்கா களை கட்டியுள்ளது.
அதேவேளை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றுள்ள 18 வயது முதல் 65 வயது வரை கொண்டவர்கள் மெக்காவில் அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கமாக மெக்காவில் புனித பயணத்தின்போது 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் தற்போது புனித பயண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.
ஆனாலும் கொரோனா குறைந்ததால் மெக்காவில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதனால் நேற்று முதல் புனித பயணம் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்