search icon
என் மலர்tooltip icon

    தென் கொரியா

    • மாநகரப் பகுதியில் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என எச்சரிக்கை
    • தலைநகர் பகுதியில் உள்ள 230 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

    சியோல்:

    தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் மற்றும் மேற்கு துறைமுக நகரமான இன்சியான் பகுதிகளில் நேற்று வரலாறு காணாத மழை பதிவானது. ஒரு மணி நேரத்தில 100 மில்லிமீட்டர் மழை பெய்ததாக அந்நாட்டைச் சேர்ந்த யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கனமழைக்கு குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மழை பாதிப்பு காரணமாக தலைநகர் பகுதியில் உள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 391 பேர் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

    சாலைகள், ஆற்றங்கரை வாகன நிறுத்துமிடங்கள், ஐந்து தேசிய மலைப் பூங்காக்கள் பாதுகாப்புக்காக மூடப்பட்டன. எட்டு பயணிகள் படகுகளில் இருந்த எண்பத்தெட்டு பேர் மீட்கப்பட்டனர்.

    மேலும் மாநகரப் பகுதியில் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என தென்கொரியா வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ள சேதம் குறித்து கண்காணித்து வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • நூரி ராக்கெட் பூமியில் இருந்து 700 கி.மீ. தொலைவில் செயற்கைகோளை துல்லியமாக செலுத்தியது.
    • செயற்கை கோள் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

    சியோல்:

    தென்கொரியா, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராக்கெட்டை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது. ராக்கெட்டின் எந்திரம் திட்டமிட்டதைவிட முன்பே எரிந்ததால் சுற்று வட்ட பாதையில் நுழைய முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று 'நூரி' ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில் பொருத்தப்பட்ட செயற்கை கோள் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

    மூன்று நிலைகளில் இயங்க கூடிய நூரி ராக்கெட் பூமியில் இருந்து 700 கி.மீ. தொலைவில் செயற்கைகோளை துல்லியமாக செலுத்தியது.

    இதன் மூலம் செயற்கை கோளை புவியின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்துவதற்கான தொழில்நுட்பமும், பெரிய வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் திறன் தங்களி டம் இருப்பதாக தென்கொரிய தெரிவித்துள்ளது.

    மேலும் வரும் ஆண்டுகளில் நான்கு நூரி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவும், அடுத்த தலைமுறை ஏவுகணையை உருவாக்கவும் தென்கொரியா திட்டமிட்டுள்ளது. சொந்த தொழில் நுட்பத்தில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் 10-வது நாடு தென்கொரியா ஆகும்.

    • வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
    • வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சியோல் :

    வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இந்த சோதனைகள் அமைந்துள்ளன.

    இந்த ஏவுகணை சோதனைகளையொட்டி அதன் அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இதனிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதன்படி, இன்று அதிகாலை தென் கொரியாவும் அமெரிக்காவும் தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து எட்டு நிலப்பரப்பு ஏவுகணைகளை ஏவியது என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திங்கள்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு தொடங்கி சுமார் 10 நிமிடங்களுக்கு தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் ஏவுகணைகளை சோதனைகளை நடத்தினர்.

    ×