search icon
என் மலர்tooltip icon

    சிரியா

    • சிரியாவின் வடக்கு மாகாணங்களை குறிவைத்து துருக்கி ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
    • சிரியா-குர்தீஷ் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள கோபனே நகரில் தாக்குதல் நடந்தது.

    சிரியாவின் வடக்கு மாகாணங்களை குறிவைத்து துருக்கி ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த வாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த குண்டு வெடிப்புக்கு சிரியாவைசேர்ந்த குர்தீஷ் அமைப்புதான் காரணம் என்று துருக்கி குற்றம் சாட்டிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    அலெப்போ, ஹசாரே மாகாணங்கள் மற்றும் சிரியா-குர்தீஷ் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள கோபனே நகரில் தாக்குதல் நடந்தது. 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை துருக்கி ராணுவம் வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிரியா குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • இந்த குண்டுவெடிப்பில் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

    டமாஸ்கஸ்:

    சிரியாவின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்தப் பகுதிகளை அமெரிக்க படைகளுடன் இணைந்து சிரியா மீட்டு வருகிறது.

    இந்நிலையில், அங்கு ராணுவ வீரர்களைக் குறிவைத்து, அவர்களது பஸ் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களை ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்தி வருவதாக அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • அமெரிக்க படையின் ஹெலிகாப்டர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியது.
    • தீவிரவாதிகள் தங்கி இருந்த வீட்டின் மீது வான்வெளித்தாக்குதல் நடத்தியது.

    சிரியாவின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளனர். இந்த பகுதிகளை அமெரிக்க படைகளுடன் இணைந்து சிரியா மீட்டு வருகிறது.

    இந்தநிலையில் வட கிழக்கு சிரியா ஈராக் எல்லையில் ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் சில ஐ.எஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அமெரிக்க படையின் ஹெலிகாப்டர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியது. தீவிரவாதிகள் தங்கி இருந்த வீட்டின் மீது வான்வெளித்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அங்கு தங்யிருந்த தீவிரவாதி வாகித் அல் சமாரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

    இதில் அவரது கூட்டாளி காயம் அடைந்தார். அவருடன் தங்கி இருந்த மேலும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதலின் போது பொதுமக்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சிரியாவில் மற்றொரு இடத்தில் தங்கி இருந்த அபு ஹசும் அல் உவாமி என்ற ஐ.எஸ் தீவிரவாதி அமெரிக்க படை தாக்குதலில் உயிரிழந்தார். இறந்த 2 பேரும் தீவிரவாத இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் ஆவார்கள். இதில் கொல்லப்பட்ட வாகித் அல் சமாரி கடத்தல் கும்பல்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தாக்குதலின் போது அருகில் வசித்து வந்த பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் அமெரிக்க படையினர் வேண்டுகோள் விடுத்தனர்.

    • லெபனானில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அகதிகள் கடல் வழிப் பயணம்.
    • மீட்கப்பட்ட 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.

    டார்டவுஸ்:

    லெபனான் நாட்டில் பவுண்ட் மதிப்பு 90% க்கும் கீழ் குறைந்ததால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர், இதனால் வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கடும் வாழ்வாதார போராட்டங்களை சந்தித்து வருகின்றன. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்க முடியாமல் அல்லாடி வருகின்றனர். இதனையடுத்து அண்டை நாடுகளில் அவர்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை லெபனானில் இருந்து சிரியாவிற்கு 100-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் புறப்பட்ட படகு ஒன்று சிரியாவின் கடற்கரை நகரமான டார்டவுஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது. அந்த படகில் சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்தவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 


    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிரியா கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். எனினும் பெண்கள், சிறுவர்கள் உள்பட 77 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    • சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சிரியாவின் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

    டமாஸ்கஸ்:

    சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.

    சிரியாவின் சனா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், எதிரி நாடான இஸ்ரேல் வான்வழியே நடத்திய ஏவுகணை தாக்குதல் டமாஸ்கஸ் நகரில் சில பகுதிகளை இலக்காக கொண்டிருந்தது.

    இந்நிலையில், இஸ்ரேல் வான்வழி நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிரியாவை சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொருட்களும் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இது மிக மோசமான படுகொலை என்று மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தகவல்.
    • அண்மையில் துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாகினர்.

    பெய்ரூட்:

    சிரியா நாட்டில் அரசுக்கு எதிரான துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு சிரியாவில் குர்து இன போராளிகள் வசம் உள்ள நகரில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாகினர்.

    இந்நிலையில் வடக்கு சிரியாவின் அல்-பாப் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்த சந்தை பகுதியில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.12 பேர்காயமடைந்தனர். இந்த தாக்குதல் மிக மோசமான படுகொலை என்ற மனித உரிமைகள் கண்காணிப்பு மைய தலைவர் ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியாவின் குர்து இன போராளிகள் படை வெளியிட்ட அறிக்கையில், அல்-பாப் நகரம் மீது தங்கள் போராளிகள் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தவில்லை என்று தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் குறித்து சிரிய அரசு தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    • சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ஏவுகணை வீச்சில் சிரியாவின் பீரங்கிகள் சேதம் அடைந்தது.

    டமாஸ்கஸ்:

    கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இஸ்ரேலுக்கும் அதன் பக்கத்து நாடான சிரியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக சிரியா டமாஸ்கஸ் நகரத்தில் உள்ள ராணுவ முகாம் மீது இஸ்ரேல் படையினர் நேற்று வான் வெளி தாக்குதலை நடத்தினார்கள். ஏவுகணைகளை வீசியதில் அங்கு பணியில் இருந்த சிரியா வீரர்கள் 3 பேர் இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஏவுகணை வீச்சில் சிரியாவின் பீரங்கிகள் சேதம் அடைந்தது.

    ×