search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    செனகல் நாட்டில் பஸ்கள் மோதல்- 40 பயணிகள் பலி
    X

    செனகல் நாட்டில் பஸ்கள் மோதல்- 40 பயணிகள் பலி

    • தறி கெட்டு ஓடிய அந்த பஸ் எதிரே வேகமாக வந்த மற்றொரு பஸ் மீது மோதியது.
    • விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தது.

    காப்ரீன்:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் உள்ள காப்ரீன் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சின் டயர் பஞ்சரானது. இதனால் தறி கெட்டு ஓடிய அந்த பஸ் எதிரே வேகமாக வந்த மற்றொரு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தது. இதில் 40 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவத்துக்கு செனகல் நாட்டு அதிபர் மேக்கிசால் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். விபத்தில் 40 பேர் இறந்தது வருத்தம் அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய வேண்டுகிறேன். இன்று முதல் 3 நாட்கள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கபடும் என அவர் கூறினார்.

    செனகல் நாட்டில் மோசமான சாலைகளாலும், போக்குவரத்து விதிமுறைகளை டிரைவர்கள் சரியாக கடைபிடிக்காததாலும் இது போன்று விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Next Story
    ×