search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும்: ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்
    X

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும்: ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்

    • மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்பட 38 டன் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.
    • போரில் பொது மக்கள் உயிரிழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

    நியூயார்க்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய துணை நிரந்தர பிரதிநிதி ரவீந்திரன் பேசியதாவது:-

    இஸ்ரேல், பாலஸ்தீனம், இரு தரப்பும் நேரடி பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்க நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும்.

    இந்த போர் சூழல் அதிகரிப்பு மோசமாக மனிதாபிமான நிலைமையை இன்னும் மோசமாக்கி உள்ளது.

    இது மீண்டும் ஒருமுறை போர் நிறுத்தத்தின் பலவீனமான தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த சவாலான காலங்களில் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்பும். பாலஸ்தீன மக்களுக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்பட 38 டன் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

    காசாவில் உள்ள ஆஸ்பத்திரி மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளோம்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை, போரில் பொது மக்கள் உயிரிழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

    அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி ஆபத்தானது. நேரடி சமாதான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×