என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
இங்கிலாந்தில் சிறிய வீட்டில் குடும்பத்துடன் குடியேறும் பிரதமர் ரிஷி சுனக்
- இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கபட்டார்.
- லண்டன் டவுணிங் வீதியில் உள்ள 10-வது இல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
லண்டன்:
இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கபட்டார். அந்நாட்டு வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரமதமரானது இதுவே முதல் முனறயாகும்.
ரஷி சுனக்கின் மனைவி பெயர் அக்ஷயா மூர்த்தி .இவர் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தியின் மகள் ஆவார். ரிஷி சுனக்-அக்ஷதா மூர்த்தி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இங்கிலாந்தில் போரிஸ்ஜான்சன் பிரதமராக இருந்த போது ரிஷி சுனக் நிதி மந்தரியாக இருந்தார். அந்த சமயம் அவர் லண்டன் டவுணிங் வீதியில் உள்ள 10-வது இல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மேற்கு லண்டனில் இருக்கும் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். மகள்கள் படிக்கும் பள்ளி இதன் அருகில் இருப்பதால் அவர் இந்த வீட்டில் குடியேறினார்.
தற்போது அவர் பிரதமராக ஆனதையடுத்து மீண்டும் டவுணிங் வீதியில் உள்ள 10-ம் நம்பர் கொண்ட சிறிய இல்லத்துக்கு குடும்பத்துடன் திரும்ப முடிவு செய்துள்ளார்.
இங்கிலாந்தை பொறுத்த வரை 1735-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்தவர்கள் 10-ம் எண் கட்டிடத்தின் அருகில் உள்ள 11-ம் நம்பர் கொண்ட இல்லத்தில் தான் குடியிருந்து வந்தனர். 4 படுக்கை வசதிகளுடன் மிக பெரியதாக இருக்கும் இந்த கட்டிடத்தை அவர்கள் பிரதமர் அலுவலகமாகவும், அதிகாரபூர்வ இல்லமாகவும் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது இந்த இல்லத்தில் தங்காமல் பிரதமர் ரிஷி சுனக் தான் ஏற்கனவே வசித்த 10-ம் நம்பர் இல்லத்தில் குடியேற உள்ளார். இந்த வீடு 11-ம்நம்பர் இல்லத்தை விட சிறியதாகும். இருந்த போதிலும் அமைதியான சூழ்நிலையில் இந்த வீடு அமைந்து இருப்பதாலும் அந்த வீடு தனக்கும், குடும்பத்தினருக்கும் மிகவும் பிடித்து இருப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.