என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம்- தலிபான்கள் தலைவர்
- எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம்.
- குழந்தைகளுக்கான மத மற்றும் நவீன படிப்புகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் தலிபான் அரசின் தலைவரான ஹிபெதுல்லா அக்ஹண்டாஸ்டா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த நாங்கள் யாரையும் அனுமதிக்கமாட்டோம். இந்த உறுதிமொழியை ஆப்கானிஸ்தானின் அண்டை நாட்டினருக்கும், பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் நாங்கள் அளிக்கிறோம்.
அதேவேளையில் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். பரஸ்பர தொடர்பு தூதரகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் உறவுகள் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா உள்பட உலக நாடுகளுடன் நல்ல முறையில் தொடர விரும்புகிறோம்.
கல்வியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான மத மற்றும் நவீன படிப்புகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வியை மேம்படுத்த கடினமாக உழைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.