search icon
என் மலர்tooltip icon

    துருக்கி

    • நிலநடுக்கத்தால், நேற்றைய பிற்பகல் நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.
    • பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    துருக்கி- சிரியா எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.

    மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

    இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பிற்பகல் நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.

    இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • துருக்கியில் 10 மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
    • நிவாரண பொருட்களை சிரியா அதிகாரிகளிடம் இந்திய தூதரக அதிகாரி எஸ்.கே.யாதவ் ஒப்படைத்தார்.

    அங்காரா :

    துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.

    பூகம்பத்தால், இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக காட்சி அளிக்கிறது. நவீன எந்திரங்கள் உதவியுடன் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இடிபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. துருக்கியில் 10 மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

    ஒரு வார கால தேசிய துக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    துருக்கியில் மொத்த பலி எண்ணிக்கை நேற்று 8 ஆயிரத்து 500-ஐ தாண்டியது. இதை துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் தெரிவித்தார். நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டபோது இத்தகவலை கூறினார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    முதல் நாளில் மீட்புப்பணியில் தொய்வு இருந்தபோதிலும், தற்போது நிலைமை சரியாகிவிட்டது. துருக்கியில், 1 கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் யாரையும் தெருவில் நிற்கவிட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிரியாவில் 2 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதனால் இரு நாடுகளிலும் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டது.

    துருக்கியில் 2 டஜனுக்கு மேற்பட்ட நாடுகள் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், பலர் உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 3-வது நாளான நேற்று, கரமன்மராஸ் நகரில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கிடையே ஆரிப்கான் என்ற 3 வயது ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. அக்குழந்தையை பத்திரமாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    சில மணி நேரங்கள் கழித்து, அதியமன் நகரில், பேதுல் எடிஸ் என்ற 10 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாள். அவளது தாத்தா, கண்ணீர்மல்க முத்தமிட்டு, ஆம்புலன்சில் அனுப்பிவைத்தார்.

    துருக்கியில் கூடாரம், ஸ்டவ் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, மீட்புப்பணியில் ஈடுபடுவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப்படையின் 2 குழுக்கள் ஏற்கனவே துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. நேற்று இரவு 3-வது குழு அனுப்பிவைக்கப்பட்டது.

    7 வாகனங்கள் மற்றும் 4 மோப்ப நாய்களுடன் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் 5 பெண்களும் அடங்குவர்.

    பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் உள்பட 6 டன் நிவாரண பொருட்களை இந்தியா நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அந்த விமானம், நேற்று காலை சிரியா போய்ச் சேர்ந்தது.

    நிவாரண பொருட்களை சிரியா அதிகாரிகளிடம் இந்திய தூதரக அதிகாரி எஸ்.கே.யாதவ் ஒப்படைத்தார்.

    இதுபோல், 30 படுக்கை வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி அமைப்பதற்கான ராணுவ தள ஆஸ்பத்திரி தளவாடங்களை சுமந்து கொண்டு 2 விமானப்படை விமானங்கள் நேற்று துருக்கி நாட்டுக்கு போய்ச் சேர்ந்தன. அதில், 54 மருத்துவ பணியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.இதற்கிடையே, துருக்கி மற்றும் சிரியாவுக்கு கப்பல்கள் மூலம் 10 ஆயிரம் நடமாடும் வீடுகள் படிப்படியாக அனுப்பிவைக்கப்படும் என்று கத்தார் அரசு அறிவித்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு, ஹைதி நாட்டில் நடந்த 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பலியானதுதான் மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது.

    • காணாமல் போனவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • துருக்கியின் 10 மாகாணங்களில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

    துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது. இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    துருக்கியில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு பல மாதங்கள் ஆகலாம். மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இந்தியர்கள் 75 பேரிடம் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளதாகவும், ஒருவரை காணவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூர பகுதியில் சிக்கியிருந்த 10 இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

    • துருக்கியின் 10 மாகாணங்களில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
    • சிரியா அகதிகளின் நிலைமை நிலநடுக்கத்திற்கு பிறகு பரிதாபமானதாக மாறிவிட்டது.

    இஸ்தான்புல்:

    துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது. துருக்கியில் 8,574 பேரின் சடலங்களும், சிரியாவில் 2530 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    துருக்கியில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு பல மாதங்கள் ஆகலாம். மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    சிரியாவில் ஏற்கனவே நிலைமை மோசமாக இருந்தது. உறைய வைக்கும் குளிர், காலரா தொற்று நோய், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த சிரியா அகதிகளின் நிலைமை நிலநடுக்கத்திற்கு பிறகு பரிதாபமானதாக மாறிவிட்டது. தற்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட வடக்கு சிரியாவின் பகுதிகளில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அகதிகளுக்கு மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே துருக்கியின் தெற்கு பகுதியில் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளான பகுதியை அதிபர் எர்டோகன் இன்று நேரில் பார்வையிட்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசாங்கம் மந்தமாக மேற்கொள்வதாக மக்களிடையே அதிருப்தியும் கோபமும் எழுந்துள்ள நிலையில், எர்டோகன் இன்று நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

    • காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
    • நிலநடுக்கத்தால் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.

    இந்த நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி - சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

    இந்த கோர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் இதுவரை 9500 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், துருக்கியில் 6,957 பேரும், சிரியாவில் 2,547 பேரும் உயிரிழந்துள்ளனர்.மேலும், இந்த நிலநடுக்கத்தால் 2 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
    • இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், இரவு பகல் என பாராமல் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.

    இந்த நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து, அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் ஒரே நாளில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.

    இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், இரவு பகல் என பாராமல் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து, நேற்று 5.5 மற்றும் 5.7 என இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டு்ம நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் நூர்தாகி பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    மேலும், இதுவரை பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    • துருக்கி, சிரியா எல்லையில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • தொடர் நிலநடுக்கங்களால் துருக்கி மற்றும் சிரியா கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இஸ்தான்புல்:

    துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

    இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி - சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த கோர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 1 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

    கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும்.
    • தொலைதூர பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக உள்ளது.

    இஸ்தான்புல்:

    துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டி உள்ளது. மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைத்தவண்ணம் உள்ளது. உயிரிழப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.

    சிரியாவிற்கு அருகிலுள்ள தொலைதூர பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக உள்ளது. பனிப்பொழிவால் சில சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்களை விரைவாக கொண்டு செல்ல முடியவில்லை.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 தென்கிழக்கு மாகாணங்களில் 3 மாதங்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் அதிபர் தாயிப் எர்டோகன். மீட்பு பணிகளை விரைந்து முடிப்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறி உள்ளார்.

    100 ஆண்டுகளில் இல்லாத அளவில் நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எர்டோகனின் அரசாங்கம் மிகவும் மந்தமாக பணி செய்வதாக சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே, எர்டோகன் அதிரடியாக அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

    • மீட்பு பணிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
    • உதவி கேட்பவர்களின் இருப்பிடத்தை உடனடியாக அறிந்து உதவி செய்யப்படுவதாக போலீசார் கூறுகின்றனர்.

    இஸ்தான்புல்:

    துருக்கி- சிரியா எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுங்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் கொத்துக் கொத்தாக மீட்கப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்கிறது. இன்று மாலை நிலவரப்படி மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    நிலநடுக்க பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. சிலர் அச்சமூட்டும் வகையில் கருத்துக்களையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர். குறிப்பாக, அதிக பாதிப்பை சந்தித்துள்ள துருக்கியின் ஹடே நகரில், மீட்பு பணிகள் சரியில்லை என புகார் தெரிவித்து பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    இவ்வாறு தேவையற்ற அச்சம் மற்றும் பீதியை கிளப்பும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 4 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் உருவாக்கும் நோக்கில் பதிவுகளை பகிர்ந்துள்ள கணக்குகளை அதிகாரிகள் கண்டறிந்த பின்னர், நான்கு நபர்களிடமும் விசாரணை நடத்தப்படுவதாக

    போலீசார் தெரிவித்தனர். ஆனால் அந்த பதிவுகள் குறித்த எந்த தகவலையும் காவல்துறை வெளியிடவில்லை.

    உதவி கேட்டு சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிரும் மக்களின் முகவரி மற்றும் இருப்பிடத் தகவல் உடனடியாகக் கண்டறியப்பட்டு, உதவிகளை செய்வதற்காக ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதலில் ரிக்டர் அளவில் 5.5 எனவும் இரண்டாவது முறையாக 5.7 எனவும் பதிவானது. இதனால், மக்கள் மேலும் பீதியில் உறைந்துள்ளனர்.
    • நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

    துருக்கி- சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது.

    இதில் கட்டிடங்கள் பல குலுங்கி, சரிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் 400 பேர் பலி என கூறி வந்த நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 4000 ஆனது.

    இந்நிலையில், இன்று காலை முதல் துருக்கியில் மீண்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ரிக்டர் அளவில் 5.5 எனவும் இரண்டாவது முறையாக 5.7 எனவும் பதிவானது. இதனால், மக்கள் மேலும் பீதியில் உறைந்துள்ளனர்.

    இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இதுவரை 5000 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நிலநடுக்கத்தால், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

    • நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது.
    • காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக துருக்கியில் தற்காலிக ஆஸ்பத்திரி அமைத்து கொடுக்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்து உள்ளது.

    அங்காரா:

    நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது. மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்து உள்ளார்.

    இங்கிலாந்தில் இருந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை துல்லியமாக கண்டுபிடிப்பதற்காக 76 பேரும் மீட்பு பணி நிபுணர்கள் 4 பேரும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள். உபகரணங்கள். 400 ரக ராணுவவிமானம், மற்றும் பணியாளர்களை அனுப்பி வைத்து உள்ளது. போலந்து நாடு 76 தீயணைப்பு வீரர்கள், மற்றும் நன்கு பயிற்சி பெற்ற மோப்பநாய்கள், நவீன கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக துருக்கியில் தற்காலிக ஆஸ்பத்திரி அமைத்து கொடுக்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்து உள்ளது.இஸ்ரேல் நாடு 150 என்ஜீனியர்கள் கொண்ட மீட்பு படை, மருத்துவ பணியாளர்கள், உதவி பொருட்களை அனுப்பி வைத்து உள்ளது. இந்தியாவும் 2 கட்டமாக மீட்பு குழுவினரை இன்று துருக்கி அனுப்பியது. இதே போல ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ் உக்ரைன், போலந்து கத்தார், செர்பியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவி செய்துள்ளன.

    • நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
    • பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    துருக்கி- சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது.

    நிலநடுக்கத்தில் 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

    24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

    ×