search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதியில் நம்பர் 2 வீரரான ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 2 வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சும், இத்தாலியின் ஜானிக் சின்னரும் மோதினர்.

    இதில், ஜோகோவிச் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு சாம்பியனான அவர் விம்பிள்டன் டென்னிசில் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    • இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதுகிறார்கள்.
    • 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள ஜோகோ விச் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.

    இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதுகிறார்கள்.

    23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள ஜோகோ விச் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளார்.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நடப்பு சாம்பியனான அவர் விம்பிள்டன் டென்னிசில் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்.

    இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு அரை இறுதியில் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரெஸ் (ஸ்பெயின்)-மெட்வடேவ் (ரஷியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் வோன்ட் ரோசோவா (செக்குடியரசு)-ஜாபியர் (துனிசியா) ஆகியோர் மோதுகிறார்கள்.

    • விம்பிள்டன் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதிப் போட்டி நடந்தது.
    • இதில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி தோல்வி அடைந்தது.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி, நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப், பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியுடன் மோதியது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் போபண்ணா-மேத்யூ எப்டென் ஜோடி 5-7, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதியில் நம்பர் 2 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவும், துனீசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபேரும் மோதினர்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் சபலென்கா முதல் செட்டை கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜபேர் இரண்டாவது மற்றும் 3வது செட்டை வென்றார்.

    இதன்மூலம் ஜபேர் 6-7 (5-7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக் நாட்டு வீராங்கனை மார்கெடா வோண்ட்ரசோவா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவுடன் மோதினார்.

    இதில் வோண்ட்ரசோவா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    • கொரோனா வைரஸ் தொற்று நோயை தொடர்ந்து சிகிச்சைக்கான நோயாளிகளின் காத்திருப்பு பட்டியல் நீண்டுள்ளது.
    • வேலை நிறுத்தங்கள் நடைபெறும் போது பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்ற கொள்கையில் அரசு உறுதியாக இருக்கிறது.

    இங்கிலாந்தில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த சுமுக முடிவு எட்டப்படாததால், பல்லாயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் தங்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். 5 நாள் இப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது நீடித்தால் இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை அமைப்பின் வரலாற்றிலேயே ஒரு மிக நீண்ட வேலை நிறுத்தமாக இது அமையும்.

    இன்று காலை 7 மணிக்கு தங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கிய அவர்கள் 35% ஊதிய உயர்வுக்காக போராடுகிறார்கள். இந்த மருத்துவரகள் அனைவரும் மருத்துவ படிப்பை முடித்து தங்கள் மருத்துவ பணியின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பணவீக்கத்தை கணக்கில் கொண்டு இளநிலை டாக்டர்களின் ஊதியத்தை 2008ம் ஆண்டிருந்த நிலைக்கு நிகராக கொடுக்க வேண்டும் எனக் கோரி 35% ஊதிய உயர்வை அந்நாட்டு மருத்துவர்களின் சங்கமான பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (BMA) அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால், இதில் உடன்படிக்கை ஏற்படவில்லை.

    இங்கிலாந்தின் 75,000 அல்லது அதற்கு மேற்பட்ட இளநிலை மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயை தொடர்ந்து சிகிச்சைக்கான நோயாளிகளின் காத்திருப்பு பட்டியல் நீண்டுள்ளது.

    "இங்கிலாந்தின் தேசிய மருத்துவ சேவையின் (NHS) வரலாற்றிலேயே இன்று முக்கியமான நாள். மருத்துவர்களின் வெளிநடப்பை குறிக்கும் இந்த நாள் மிக நீண்ட வேலை நிறுத்தமாக மாறி வரலாற்று புத்தகங்களில் பதிவாகி விட கூடாது" என்று பிரிட்டனின் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர்களான டாக்டர், ராபர்ட் லாரன்சன் மற்றும் டாக்டர், விவேக் திரிவேதி ஆகியோர் கவலை தெரிவித்தனர்.

    வேலை நிறுத்தங்கள் நடைபெறும்போது பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்ற முன்நிபந்தனையை கைவிடுமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

    "இளநிலை மருத்துவர்களின் இந்த 5 நாள் வெளிநடப்பு, ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். நோயாளிகளின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. சுகாதார சேவையின் காத்திருப்பு பட்டியலை குறைக்கும் முயற்சிகளை இது தடுக்கிறது. அவர்களின் 35% அல்லது அதற்கு மேற்பட்ட ஊதிய கோரிக்கை நியாயமற்றது. இந்தளவு ஊதிய உயர்வு அனைவரையும் ஏழ்மையாக்கி பணவீக்கத்தை மேலும் தூண்டி விடும் அபாயமும் உள்ளது" என்று சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே கூறியிருக்கிறார்.

    பல துறைகளில் பொது ஊழியர்களின் வேலை நிறுத்தங்களை எதிர்கொண்டுள்ள இங்கிலாந்து அரசாங்கம், வேலை நிறுத்தங்கள் நடைபெறும் போது பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறது.

    பிற உலக நாடுகளை போலவே, பல வருடங்களாக இல்லாத வகையில் முதல் முறையாக இங்கிலாந்து அரசாங்கம் அதிகரிக்கும் பணவீக்கத்துடன் போராடுகிறது. கொரோனா தொற்று நோய் பாதிப்பின் விளைவாக விநியோக சங்கிலி சிக்கல்களால் விலையுயர்வு முதலில் தூண்டப்பட்டது. பின்னர், உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் எரிசக்தி மற்றும் உணவு விலைகள் உயர்ந்தன.

    • நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
    • 43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரையிறுதியை எட்டுவது இது 3-வது முறையாகும்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூர்- பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடியை சந்தித்தது.

    இதில் போபண்ணா ஜோடி 6-7 (3-7), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரையிறுதியை எட்டுவது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டிகள் லண்டனில் நடந்தது.
    • ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று போட்டியில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யுபங்குடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் முதல் செட்டை வென்றார். சுதாரித்துக் கொண்ட யுபங் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4, 5வது செட்களை மெத்வதேவ் வென்றார்.

    இறுதியில் மெத்வதேவ் 6-4, 1-6, 4-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார். இதில் அல்காரஸ் 7-6 (7-3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டி லண்டனில் நடந்தது.
    • இதில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, 6ம் இடத்திலுள்ள துனிஷியா வீராங்கனை ஆன்ஸ் ஜபேருடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ரிபாகினா முதல் செட்டை கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட ஜபேர் 2வது, 3வது செட்களை வென்றார்.

    இதன்மூலம் ஜபேர் 6-7 (5-7(ம் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கெய்சுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ரஷிய வீரர் ரூப்லேவை வென்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று போட்டியில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச், 7-ம் நிலை வீரர் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லேவுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் முதல் செட்டை இழந்தார். சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அடுத்த 3 செட்களையும் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில் ஜோகோவிச் 4-6, 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இத்தலி வீரர் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ரோமன் சபியுலினுடன் மோதினார். இதில் சின்னர் 6-4, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவும் மோதினர்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ஸ்விடோலினா முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை இகா ஸ்வியாடெக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஸ்ட்விடோலினா வென்றார்.

    இதன்மூலம் ஸ்விடோலினா 7-5, 6-7 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக் நாட்டு வீராங்கனை மார்கெட்டா வொண்ட்ரூசோவா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

    இதில் வொண்ட்ரூசோவா 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • நள்ளிரவில் இவர்களுக்குள் நடந்த 'அளவு கடந்த நெருக்கம்,' ஆபத்தானதாக மாறியுள்ளது.
    • நோயாளி சிறுநீரக நோய்க்காக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

    பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பெனலப் வில்லியம்ஸ் எனும் பெண் செவிலியர் ஒரு ஆண் நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இத்தகைய ஒரு நிகழ்வில், நோயாளி இறந்ததால் அந்த செவிலியர் தன் வேலையை இழந்திருக்கிறார்.

    இறந்த நோயாளியுடனான தனது தொடர்பு பற்றி மருத்துவமனை அதிகாரிகளுக்குத் தெரிய வந்ததும் இறந்தவருடன் ஒரு வருடத்திற்கும் மேலாக தனக்கிருந்த உறவை ஒப்புக்கொண்டார்.

    மருத்துவ அவசர பணியாளர்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு வந்தபோது, நோயாளி அரை நிர்வாண கோலத்தில், சுயநினைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவில் இவர்களுக்குள் நடந்த 'அளவு கடந்த நெருக்கம்,' ஆபத்தானதாக மாறியுள்ளது. அந்த நோயாளி இறக்கும்போது, பெனலப் ஆம்புலன்சை அழைக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

    நோயாளி அந்த மருத்துவமனையில் சிறுநீரக நோய்க்காக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். நாட்பட்ட சிறுநீரக நோயுடன் ஒரு தூண்டப்பட்ட இதய செயலிழப்பு நிகழ்ந்ததால் அவர் இறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதுதொடர்பாக நர்சிங் கவுன்சில் குழு விசாரணை நடத்தியது. பெனலப்பின் சக பணியாளர்களுக்கு இப்போது இறந்துவிட்ட நோயாளியுடனான அவரது விவகாரம் பற்றி தெரிந்திருந்ததாகவும், அவர்களில் சிலர் மோசமான விளைவுகளைப் பற்றி அவரிடம் எச்சரித்ததாகவும், ஆனால் பெனலப் அந்த அறிவுரைகளை புறக்கணித்து விட்டார் எனவும் தெரியவந்தது.

    ஆம்புலன்ஸை அழைக்கும்படி சக ஊழியர்கள் கூறியதாகவும், ஆனால் அவர் அதை அலட்சியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. காரின் பின்புறத்தில் "30 முதல் 45 நிமிடங்கள்" மட்டுமே செலவிட்டதாகவும், இருவரும் "வெறுமனே பேசிக் கொண்டு மட்டுமே இருந்ததாக" செவிலியர் பெனலப் கூறியிருக்கிறார்.

    நீண்ட நாட்களாக குற்றத்தை மறுத்து வந்த அவர், மே மாதம் நடந்த விசாரணையின் போது, இறந்தவருடனான தனது உறவை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

    • நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு ‘ஆன்லைன்’ நண்பர்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
    • 55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.

    சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதள விளையாட்டுகள் மக்களுக்கிடையேயான 'மனித' தொடர்பை குறைத்து வருவதாக பிரிட்டனில் 3000 பேரிடம் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான "லைஃப்சர்ச்" நடத்திய ஆய்வில் தெரிகிறது.

    அந்நாட்டு மக்களில் கிட்டத்தட்ட 10 பேரில் ஒருவர், தங்களுக்கு எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருப்பதாக இது கூறுகிறது.

    18 முதல் 70 வயதுக்குட்பட்ட வயதுள்ளவர்களில் 8% பிரிட்டன் மக்கள் இணைய வழியிலேயே அனைத்து சமூக தொடர்புகளையும் அடைகிறார்கள் என்றும் நண்பர்களைக் கொண்ட மீதமுள்ள 92% பேர் சராசரியாக தலா 8 நண்பர்களைக் கொண்டிருந்தனர் என்றும் அது தெரிவிக்கிறது.

    இந்த புள்ளி விவரத்தை சுமார் 5.5 கோடி (55 மில்லியன்) மக்கள் தொகைக்கு விரிவுபடுத்தி ஆராயும்போது சுமார் 40 லட்சம் (4.4 மில்லியன்) மக்கள் தங்களுக்கு நம்பக்கூடிய 'உண்மையான' நண்பர்கள் இல்லாமல் வாழ்வதை காட்டுகிறது.

    நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு 'ஆன்லைன்' நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களுடன் சமூக ஊடகங்கள், ஆன்லைன் கேம்கள் அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

    ஆண்களுக்கு சராசரியாக 9 நண்பர்கள் இருப்பதாகவும், பெண்களுக்கு சராசரியாக 7 பேர் இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது. 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சராசரியாக 10 நண்பர்கள் உள்ளனர்.

    இவர்களோடு ஒப்பிடுகையில், 35-54 வயதுடையவர்களுக்கு குறைந்தளவே உள்ளனர். அதாவது 7 பேர் மட்டுமே நட்பில் உள்ளனர்.

    55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.

    3,000 பேரில் 55 சதவீதம் பேர் தங்களுக்கு ஒரு 'சிறந்த நண்பர்' இருப்பதாகவும், அவர்களின் மனைவி அல்லது கணவர் இதில் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    மொத்தத்தில், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 3ல் ஒரு பகுதியினர் (39 சதவீதம்) தங்கள் சிறந்த நண்பர் தங்கள் கணவர், மனைவி அல்லது தங்கள் 'இணை' (Partner) என்று கூறியுள்ளனர்.

    ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள வாட்ஃபோர்டைச் சேர்ந்த 44 வயதான பேரி டெய்லர், அவரது மனைவி கிளாரியை தனது 'சிறந்த நண்பர்' என்று கூறியுள்ளார்.

    டோர்செட் பகுதியின் ஸ்வானேஜ் எனும் இடத்தை சேர்ந்த 23 வயதான க்ளோ வைட் எனும் பெண், தனது 2 சிறந்த நண்பர்களும் லண்டனுக்குச் சென்றதிலிருந்து தனக்கு 'உண்மையான நண்பர்கள்' இல்லை என்று கூறியிருக்கிறார்.

    "3,000 பிரிட்டன் மக்களிடம் நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு உண்மையான நண்பர்கள் இல்லை என தெரிகிறது" என லைஃப்சர்ச் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    அண்மைக்காலங்களில், இந்தியாவிலும் மக்கள் தங்களின் பெருமளவு நேரத்தை ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்வதை தவிர்த்து சமூக வலைதளங்களிலும், ஆன்லைன் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளிலுமே கழித்து வருவதால், தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு மனநல பிரச்னைகளுக்கு ஆளாவார்கள் என உளவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

    இந்த பின்னணியில், பிரிட்டன் நாட்டின் இந்த ஆய்வின் புள்ளி விவரங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

    ×