search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • மன்னர் சார்லசின் மனைவியான கமிலாவும் இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர், அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியபோதும், அதிகாரபூர்வ முடிசூட்டு விழா பல மாதங்களாக நடைபெறாமலே இருந்து வந்தது.

    இந்த நிலையில் மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா நடந்தது.

    அதனை தொடர்ந்து, 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த பாரம்பரிய விழா நடைபெற இருக்கிறது. இந்த கோலாகலத்தை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் இந்த பிரமாண்ட விழா எப்படி நடைபெறும் என்ற விவரங்களை பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விழா நடைபெறும் மே 6-ந் தேதி காலை மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகிய இருவரும் தங்கமுலாம் பூசப்பட்ட மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட குதிரை வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்துக்கு வருவார்கள்.

    சார்லசின் முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டுகள் பழைமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயார்படுத்தப்பட்டிருக்கிறது.

    இந்த முடிசூட்டு விழாவின்போது மன்னர் மூன்றாம் சார்லஸ் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல் ஏந்தி அந்த சிம்மாசனத்தில் அமர்வார். அதை தொடர்ந்து, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு, மன்னர் ஆசீர்வதிக்கப்படுவார். அதன் பிறகு, புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் 3-ம் சார்லசுக்கு சூட்டப்படும்.

    தொடர்ந்து பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து கொண்டு, நாட்டு மக்களுக்கு புதிய மன்னர் சார்லஸ் உரையாற்றுவார். அந்த தினமே, மன்னர் சார்லசின் மனைவியான கமிலாவும் இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.

    மன்னரின் முடிசூட்டு விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்களும், இங்கிலாந்தை சேர்ந்த தொண்டு மற்றும் சமூக குழுக்களின் 850 பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பாரம்பரிய மரபுப்படி மன்னர் சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார்.
    • இங்கிலாந்தில் உள்ள பிரபல மதுபான ஆலையான விண்ட்சர்-ஈடன் ப்ரூவரி சார்பில் புதிய பீர் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3-ம் சார்லஸ் அரியணை ஏறிய நிலையில், அடுத்த மாதம் (மே ) 6-ந் தேதி மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்த விழாவின் போது பாரம்பரிய மரபுப்படி மன்னர் சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். விழாவில் உலகம் முழுவதும் இருந்து 2,000 முக்கிய பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். இந்த நிலையில் சார்லசின் முடிசூட்டு விழாவை கொண்டாடும் வகையில் இங்கிலாந்தில் உள்ள பிரபல மதுபான ஆலையான விண்ட்சர்-ஈடன் ப்ரூவரி சார்பில் புதிய பீர் தயாரிக்கப்பட்டுள்ளது. 'ரிட்டர்ன் ஆப் தி கிங்' என அழைக்கப்படும் இந்த புதிய பீர் மன்னர் சார்லசின் வாழ்நாள் சேவையை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மதுபான ஆலையின் தலைவரும், இணைநிறுவனருமான வில்கால்வர்ட் கூறினார்.

    • மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தி ஆசிர்வதிக்கப்பட்டதும் புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் சார்லசுக்கு சூட்டப்படும்.
    • முடி சூட்டு விழா அடுத்தமாதம் (மே) 6-ந்தேதி வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் உள்ள அபேதேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து புதிய மன்னராக 3-ம் சார்லஸ் அரியணை ஏறினார்.

    இந்நிலையில் அடுத்த மாதம் (மே) 6-ந்தேதி மன்னர் சார்லசின் முடி சூட்டு விழா நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்த முடிசூட்டுவிழாவின் போது பாரம்பரிய மரபுப்படி மன்னர் சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். பின்னர் மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தி ஆசிர்வதிக்கப்பட்டதும் புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் சார்லசுக்கு சூட்டப் படும்.

    இதையடுத்து பக்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் இருந்து மன்னர் சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அதே நாளில் இங்கிலாந்து ராணியாக கமீலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்படுவார்.

    இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட், மற்றொரு இளவசரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மன்னரின் முடி சூட்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    உலகம் முழுவதும் உள்ள சுமார் 2000 முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பட உள்ளன. முடி சூட்டு விழா அடுத்தமாதம் (மே) 6-ந்தேதி வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் உள்ள அபேதேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. 

    • ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.
    • கடந்த ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த 5 பேரை தலிபான்கள் சிறை பிடித்தனர்.

    லண்டன்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு நாட்டை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து நாட்டவர்கள் 3 பேரை தலிபான்கள் கைது செய்து சிறை பிடித்துள்ளதாக இங்கிலாந்து அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்த ஸ்காட் ரிச்சர்ட்ஸ் கூறும்போது, அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் நன்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் நாங்கள் நம்புகிறோம்.

    சித்ரவதை போன்றவற்றில் அவர்கள் உட்படுத்தப்பட்டனர் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார். இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரஜைகளுடன் தூதரக தொடர்பை பெற நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளித்து வருகிறோம் என்றார்.

    மூன்று பேரில் 2 நபர்கள் கடந்த ஜனவரி முதல் தலிபான்களால் பிடிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 3-வது நபர் எவ்வளவு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. அவர்களை மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த 5 பேரை தலிபான்கள் சிறை பிடித்தனர். அவர்களை 6 மாதங்களுக்கு பிறகு விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிற்கு 340,000 யூரோக்களுக்கு மேல் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
    • டிசம்பர் மாதத்தில் சுனக்கின் லாட்வியா மற்றும் எஸ்டோனியா பயணத்திற்கு 62,498 யூரோ பயணச் செலவு ஏற்பட்டுள்ளது.

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமானங்களில் பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, எகிப்தில் நடந்த காப்27 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் கலந்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி பயணம் செய்துவிட்டு மறுநாள் திரும்பி வருவதற்காக, இங்கிலாந்து அரசு 108,000 யூரோக்கள் தனியார் ஜெட் பயணத்திற்கு செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

    ஒரு வாரம் கழித்து, இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிற்கு 340,000 யூரோக்களுக்கு மேல் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    டிசம்பர் மாதத்தில் சுனக்கின் லாட்வியா மற்றும் எஸ்டோனியா பயணத்திற்கு 62,498 யூரோ பயணச் செலவு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், இங்கிலாந்து பிரதமர் ரிஷி இந்திய ரூபாய் மதிப்பின்படி 4.46 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    மக்கள் தங்களின் சொந்த கட்டணத்தையே செலுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில், வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது என்று கூறப்படுகிறது.

    • சொந்த வீடு வைத்திருப்போரில் சீக்கியர்கள் முதல் இடத்தில் உள்ளனர்.
    • சொந்த வீடுகளில் வாழ்வோரில் 36 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள் ஆவார்கள்.

    லண்டன் :

    இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அதன்பதிவுகளின் அடிப்படையில், நாட்டின் மக்கள் தொகைக்கான பல்வேறு துணைப்பிரிவில் தேசிய புள்ளி விவரங்களுக்கான அலுவலகம் பகுப்பாய்வு செய்து தகவல்களை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், வீடு, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி மூலம் மதம் என்ற தலைப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது வருமாறு:-

    * ஆரோக்கியம் என எடுத்துக்கொண்டால் ஒட்டு மொத்தமாக 82 சதவீதத்தினர் நன்றாக உள்ளனர். ஆனால் இந்துக்களில் இந்த ஆரோக்கிய விகிதம் 87.8 சதவீதமாக உள்ளது.

    * ஒட்டு மொத்த கல்வி விகிதத்தில், நிலை 4 மற்றும் அதற்கு மேலும் (சான்றிதழ் நிலை) படித்தவர்கள் எண்ணிக்கை 33.8 சதவீதம் ஆகும். ஆனால் இந்துக்களில் இது 54.8 சதவீதம் ஆகும்.

    * சொந்த வீடுகள் என்று எடுத்துக்கொண்டால், அதிகபட்சமாக சீக்கியர்களில் 77.7 சதவீதத்தினர் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர்.

    * மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதத்தைத் தெரிவிப்பது சுய விருப்பத்தைப் பொறுத்ததுதான். இங்கிலாந்தில் 94 சதவீதத்தினர் தங்கள் மதத்தைத் தெரிவித்துள்ளனர்.

    * ஒட்டு மொத்த மக்கள் தொகையை விட கிறிஸ்தவர்கள் ஆரோக்கியம் குறைவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

    * சொந்த வீடுகளில் வாழ்வோரில் 36 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். இது ஒட்டுமொத்த மக்கள் தொகையான 27.1 சதவீதத்தை விட அதிகம்

    * சராசரியாக 51 வயதானவர்கள், இன்னும் அடமானம் அல்லது கடனுக்கான தொகையை திருப்பிச்செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு தெரிய வந்துள்ளது.

    ஏற்கனவே வெளியான முந்தைய புள்ளி விவரம், இங்கிலாந்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை முதல்முறையாக மக்கள் தொகை எண்ணிக்கையில் பாதிக்கும் கீழாக குறைந்து விட்டதைக் காட்டியது. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மக்கள் தொகை அதிகரித்து இருந்ததும் தெரிய வந்தது.

    • 14,000 பீப்பாய்கள் வைட்ச் பண்ணையில் இருந்து வருகிறது.
    • பெரென்கோ ஒரு நாளைக்கு சுமார் 40,000 பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

    தெற்கு இங்கிலாந்தின் பூல் துறைமுகத்தில் 200 பீப்பாய்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் எண்ணெய் மிதந்து காணப்படுகிறது.

    இதுகுறித்து ஆங்கிலோ- பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான பெபரென்கோவின் இங்கிலாந்து பிரிவு, "தெற்கு இங்கிலாந்தின் டோர்செட்டில் உள் வைட்ச் பண்ணையில் அதன் கிணறு தளங்களில் ஒன்றில் வரையறுக்கப்பட்ட எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக" கூறியது.

    எண்ணெய் கசிவு என்பது மிக ஆபத்தான விஷயம். அதனால், துறைமுகத்தில் என்ன நடந்தது என்பதை அறிய முழு விசாரணை தொடங்கப்படும் என்று பொது மேலாளர் பிராங்க் டி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

    மேலும், கசிவு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை தொடங்கப்படும் என்றும் கூறினார்.

    பெரென்கோ ஒரு நாளைக்கு சுமார் 40,000 பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இதில் சுமார் 14,000 பீப்பாய்கள் வைட்ச் பண்ணையில் இருந்து வருகிறது.

    • போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நெருங்கிவிடாதபடி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
    • போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், முட்டை மற்றும் மைகளை வீசினர். மேலும் புகை குண்டுகளை வீசினர்.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த 19-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்தியாவின் பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால்சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூதரகத்தில் இருந்த இந்திய தேசிய கொடியை அகற்றினர்.

    இந்நிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு ஏராளமானோர் திரண்டு கோஷம் எழுப்பினர். இதையடுத்து தூதரகத்தில் இருந்து பல அடி தூரத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டனர். அப்பகுதியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூதரகத்துக்குள் யாரும் நுழைந்து விடாதபடி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நெருங்கிவிடாதபடி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், முட்டை மற்றும் மைகளை வீசினர். மேலும் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, இந்திய தூதரகம் முன்பு போராட்டம் சிறியதாக தொடங்கினாலும் மாலையில் எண்ணிக்கை அதிகரித்தது. சுமார் 2 ஆயிரம் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் தடுப்புகளை உடைக்க முயன்றனர். அப்போது போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், மை மற்றும் வண்ண பொடிகளை வீசினர் என்றனர்.

    இந்திய தூதரகத்தில் தேசியக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அகற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தூதரக கட்டிடம் முன்பு பெரிய அளவில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு இருக்கிறது.

    • ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.
    • ரபேல் நடால் தற்போது 13-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்

    லண்டன்:

    அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை கார்லோஸ் அல்காரஸ் கைப்பற்றினார்.

    இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

    இந்த தரவரிசை பட்டியலில் கார்லோஸ் அல்காரஸ் முதலிடம் பிடித்துள்ளார். நோவக் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.

    சிட்சிபாஸ் மூன்றாமிடமு, காஸ்பர் ரூட் நான்காம் இடமும், மெத்வதேவ் 5ம் இடமும் பிடித்துள்ளனர்.

    தரவரிசையின் முதல் 10 இடன்களில் இருந்து முதல் முறையாக ரபேல் நடால் வெளியேறியுள்ளார். அவர் தற்போது 13ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    • இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • அத்துடன் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அதிகாரிகள் தூதரக வளாகத்தில் புதிய தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.

    இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு தலைநகர் புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வது மற்றும் வழக்கு தொடரும் வகையில் இங்கிலாந்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • இங்கிலாந்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் உள்ளது.
    • உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் அந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    அந்த ஹோட்டலில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அந்த ஹோட்டல் மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியது. தகவலறிந்து சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்றன. அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மந்திரி ஆலிவர் டவ்டன் கூறினார்.
    • அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

    லண்டன்:

    அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அதாவது, அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த வரிசையில் பிரிட்டனிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு அலுவலக செல்போன்களில் டிக்டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக பாராளுமன்றத்தில் மந்திரி ஆலிவர் டவ்டன் கூறினார்.

    அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள செயலிகளை மட்டுமே அரசு அலுவலக செல்போன்களில் பயன்படுத்த அனுமதிக்கப்படும். 

    ×