search icon
என் மலர்tooltip icon

    மேற்கிந்தியத் தீவு

    • டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை போல்ட் 17 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
    • நடப்பு தொடரிலும் நியூசிலாந்து சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக உள்ளார்.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து, தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. எனவே அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை.

    இதையடுத்து, நியூசிலாந்து அணி 3-வது ஆட்டத்தில் உகாண்டா அணியுடன் இன்று மோதியது. இதில் உகாண்டா அணியை 40 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து இலக்கை வெறும் 5.2 ஓவர்களிலேயே கடந்து வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சவுதி 3 விக்கெட்டும், போல்ட், சாண்ட்னர் மற்றும் ரவீந்திரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், போட்டி முடிந்ததும் பேட்டி அளித்த நியூசிலாந்து முன்னணி வீரரான டிரெண்ட் போல்ட், இதுவே தனது கடைசி டி20 உலகக் கோப்பை என அதிரடியாக அறிவித்தார்.

    எதிர் வரும் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டமே போல்ட்டின் கேரியரில் கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள போல்ட் 32 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். நடப்பு தொடரிலும் நியூசிலாந்து சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக உள்ளார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது

    டிரினிடாட்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்துவருகிறது.

    வெஸ்ட் இண்டீசில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரூதர்போர்ட் 39 பந்தில் 68 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 40 ரன்னும், பின் ஆலன் 26 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது. ஆட்ட நாயகனாக ரூதர்போர்டு தேர்வு செய்யப்பட்டார்.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் உகாண்டா 39 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அபாரமாக பந்துவீசிய அகேல் ஹொசைன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கயானாவில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது. ஜான்சன் சார்லஸ் 44 ரன்னும், ரசல் 130 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், உகாண்டா அணி 12 ஓவரில் 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 5 விக்கெட் வீழ்த்திய அகேல் ஹொசைனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார்.

    160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 15.2 ஓவரில் 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

    நியூசிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. எங்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். பேட் மற்றும் பந்தில் எங்களின் சிறப்பான செயல் திறன் இது. இப்படிப்பட்ட ஒரு அணியை வழிநடத்த நான் பெருமைப்படுகிறேன்.

    எங்கள் பந்துவீச்சாளர்கள் திறமையைப் பயன்படுத்தி பந்து வீசும் பொழுது எங்களுக்கு எதிராக 160 ரன்களை சேசிங் செய்வது கடினம். நாங்கள் திறமையை சரியாகப் பயன்படுத்தினால் எங்களை வீழ்த்துவது கடினம். வெற்றியோ, தோல்வியோ நாம் செய்ய வேண்டிய விஷயங்களைச் சரியாக செய்யவேண்டும். முடிவைப் பற்றி எப்பொழுதும் கவலைப்படுவது கிடையாது.

    பந்துவீச்சில் எங்களுக்கு பரூக்கி மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். இரு போட்டிகளிலும் அவர் பந்து வீசிய விதம் ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சில் பணிபுரிந்தால் அவர் இதைவிட இன்னும் திறமையாக வரமுடியும் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய நமீபியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
    • ஸ்காட்லாந்து 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    ஸ்காட்லாந்து சார்பில் பிராட் வீல் 3 விக்கெட் , பிராட்லி கியூரி 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து விளையாடியது. ரிச்சி பெரிங்டன், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்கவிட்டனர். மைக்கேல் லீஸ்க் 35 ரன் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், ஸ்காட்லாந்து 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரிச்சி பெரிங்டன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    35 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்திய மைக்கேல் லீஸ்க் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
    • அதன்படி முதலில் ஆடிய பப்புவா நியூ கினியா 136 ரன்கள் எடுத்தது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் 2-வது நாளான இன்று வெஸ்ட்இண்டீசின் கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி, பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பந்துவீசியது. இதனால் பப்புவா நியூ கினியா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் சேசே பான் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்து அவுட்டானார். டோர்ஜியா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், பப்புவா நியூ கினியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

    • தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • மே 24 அன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    விரைவில் துவங்கவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    மே 24 அன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இன்று 2-வது டி20 போட்டி ஜமைக்காவின் சபினா மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சாஸ் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாபிரிக்க அணி தரப்பில் நகாபா பீட்டர், லுங்கி இங்கிடி, பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததது. அதிகபட்சமாக டீகாக் 41 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியுள்ளது.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    ஜமைக்கா:

    தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 6 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிரண்டன் கிங் அதிகபட்சமாக 85 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணியின் ஹென்ட்ரிக்ஸ் தனி ஆளாகப் போராடி 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    • கரீபியன் தீவுகளுக்கு குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
    • குட்டி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள் விபத்து நடந்துள்ளது.

    ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் ஜெர்மனியில் பிறந்தவர். இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் குட்டி விமானத்தில் பயணம் செய்தார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கரீபியன் கடல் பகுதியில் நடந்துள்ளது.

    தி குட் ஜெர்மன் (The Good German) என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். 2008-ல் ஆக்ஷன்-காமெடி படமான ஸ்பீடு ரேஸர் (Speed Racer) படத்தில் நடத்தியிருந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடற்படை அதிகாரிகள், மீனவர்கள், கடல் நீருக்கு அடியில் சென்று தேடும் வீரர்கள் உள்ளிட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு நான்கு உடல்களை மீட்டுள்ளனர்.

    ஆலிவர், அவரது மகள்கள் மதிதா (10), அன்னிக் (12) மற்றும் விமான என நான்கு பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விமானம் பெகுய்யா என்ன சிறிய தீவில் இருந்து செயின்ட் லூசியா புறப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஆரம்ப காலத்தில் டி.வி. தொடரில் நடித்தது பிரபலமானார். அதன்பின் ஆலிவர் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 206 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் டி.ஆர்.எஸ். முறைப்படி நிர்ணயித்த இலக்கை எட்டியது.

    பிரிட்ஜ்டவுன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 40 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. பென் டெக்கெட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 71 ரன்னில் அவுட்டானார். லிவிங்ஸ்டோன் 45 ரன்னில் வெளியேறினார்.

    இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் டி.ஆர்.எஸ் முறைப்படி 34 ஓவரில் 188 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அந்த அணியின் கெய்சி கார்டி சிறப்பாக ஆடி அரை சதமடித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் ஆலிக் அதான்சே 45 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்டு அதிரடியாக ஆடி 28 பந்தில் 43 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 31.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக மேத்யூ போர்டேவும், தொடர் நாயகனாக ஷாய் ஹோப்பும் தேர்வாகினர்.

    இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது.

    • 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
    • இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    புளோரிடா:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

    முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீசும், 3வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி அமெரிக்காவில் இன்று நடைபெற உள்ளது.

    இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் புரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், தொடரை இழக்கக்கூடாது என்பதற்காக இந்திய அணியும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.
    • சூர்யகுமார் யாதவ் அதிரடியால் இந்தியா 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    கயானா:

    வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெற்றிக்குப் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியதாவது:

    இந்தப் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதுபோன்ற நெருக்கடியான ஆட்டத்தில் நாங்கள் யார் என்பதை காட்ட வேண்டும். அதனால் இந்த ஆட்டத்தை நாங்கள் எதிர்நோக்கி இருந்தோம்.

    இந்த டி20 தொடரில் 7 பேட்ஸ்மேன்கள் போதும் என்ற முடிவுடன் தான் நாங்கள் களமிறங்கினோம். இதன்மூலம் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தோம்.

    ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடினாலே பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என்ற நிலை இருக்காது.

    சூரியகுமார் யாதவும் திலக் வர்மாவும் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடுகிறார்கள்.அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து விளையாடக் கூடியவர்கள்.

    சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது நிச்சயம் நல்லது தான். ஏனென்றால் அவர்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடுவார்கள். இதன்மூலம் மற்ற வீரர்களுக்கு அவர்கள் எடுத்துக்காட்டாக இருப்பார்கள் என தெரிவித்தார்.

    பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என பாண்ட்யா கடந்த போட்டியில் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

    ×