search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    துபாய் புள்ளைங்கோ நடத்திய சர்வதேச மகளிர் தின விழா

    • பட்டிமன்றம், ஆடல், பாடல் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    • துபாய் ஈமான் கலாசார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    துபாய்:

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு துபாய் புள்ளைங்கோ சார்பில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துபாய் அல்-கீஸஸ் பகுதியில் அமைந்துள்ள கேப்பிட்டல் ஸ்கூலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஷாநவாஸ் மற்றும் அய்யாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழக பரம்பரியத்தை போற்றும் வகையில் பெண்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

    இதில் பட்டிமன்றம், ஆடல், பாடல் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஈமான் கலாசார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், ரேடியோ கில்லி மற்றும் BM குரூப்ஸ் மேலாளர் உமர், TAM குரூப் ஆப் கம்பெனி நிறுவனர் ஷனவாஸ், IBG குழுமத்தின் நிர்வாகி ராஜா, காட்டு பசி உரிமையாளர் தமிழரசி மற்றும் அசோக், மதுரை பிரியாணி உரிமையாளர் பாலு மற்றும் ஜமுனா, SALWA நிறுவன உரிமையாளர் ரவி, செய்தியாளர் அஸ்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமீரகத்தில் வாழ் சிறந்த தமிழ் பெண்களுக்கு கௌரவப்படுத்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை சுஜி மற்றும் ஹரிணி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துபாய் புள்ளைங்கோ பெர்மி, ஜெனனி, அருணா மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×