என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
தோட்டத்தில் கிடைத்தது உலகப்போர் குண்டுகளா?
- ஒருவருக்கு வெடிகுண்டுகள் கிடைத்ததால் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
- வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டபோது 1.3 கோடி பேர் பார்வையிட்டனர்.
பூமி, புதையல்களின் சுரங்கம். ஆதிமனிதன் பூமியைத் தோண்டி கிழங்கையும், விதைகளையும் எடுத்து பசியாறினான். தற்கால மனிதர்கள் தோண்டும்போது வரலாற்றையும், பொன்னையும், பொருளையும் தோண்டி எடுக்கிறார்கள்.
வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமல்லாது, சாதாரணமானவர்கள் கூட நிலத்தை தோண்டும்போது ஏதாவது அதிசய பொருட்கள் கிடைக்கலாம். அப்படி ஒருவருக்கு வெடிகுண்டுகள் கிடைத்ததால் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
'இன்சேன்ரியாலிடிஸ்' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியான அந்த வீடியோவில், ஒருநபர் வீட்டுத் தோட்டத்தில் ஆழமாக குழி தோண்டியது காட்டப்படுகிறது. அப்போது ஒருபொருள் தட்டுப்பட, புதையல்போல எண்ணி பக்குவமாக தோண்டியெடுத்தபோது அது சிறிய மருத்துவ கருவிப் பெட்டி போல தெரிந்தது. செல்லரிக்கத் தொடங்கியிருந்த அந்த பெட்டியை சிரமப்பட்டு அந்த நபர் திறக்கிறார். உள்ளே சிவப்பு நிறத்தில் பக்கத்திற்கு 5 என மொத்தம் 10 பொருட்கள் இருந்தன. அவை வெடிகுண்டு போல தோற்றமளித்ததால் அதிர்ச்சியானார்.
அதுகுறித்த வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டபோது 1.3 கோடி பேர் பார்வையிட்டனர். கருத்துப் பகுதியில் அது 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் தொழில்நுட்ப குண்டு போல இருப்பதாக பலரும் கூறி இருந்தனர்.