search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டம்-  ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு
    X

    இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டம்- ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை முதலில் பேட்டிங் செய்கிறது.
    கார்டிப்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 6-வது நாளான இன்று கார்டிப்பில் நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற  ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்கிறது.

    இரு அணிகளும் தங்கள் முதல் ஆட்டத்தில்  தோல்வியை சந்தித்து உள்ளதால் வெற்றிக் கணக்கை தொடங்க தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என எதிர்பார்க்கலாம்.

    இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் வருமாறு:

    ஆப்கானிஸ்தான்:  முகமது ஷாசத், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி, முகமது நபி, குல்படின் நைப் (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், ரஷித் கான், தவ்லத் ஜட்ரன், முஜீப் ரகுமான், ஹமித் ஹசன்.

    இலங்கை: திரிமன்னே, டிமுத் கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், தனஞ்செயா டிசில்வா, மேத்யூஸ், ஜீவன் மென்டிஸ், திசரா பெரேரா, இசுரு உதனா, சுரங்கா லக்மல், மலிங்கா.
    Next Story
    ×