search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் தரவரிசை குறித்து நடால் விமர்சனம்
    X

    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் தரவரிசை குறித்து நடால் விமர்சனம்

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில் தரவரிசை மாற்றி கொடுக்கப்படுவதால் ரபெல் நடால் விமர்சனம் செய்துள்ளார்.
    ஸ்பெயினைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ரபெல் நடால், உலகளவில் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார். செம்மண் கோர்ட்டில் ஜாம்பவானாக திகழும் நடால், கிராஸ் கோர்ட்டில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது.

    டென்னிஸ் உலகத் தரவரிசையில் நடால் 2-வது இடத்தில் உள்ளார். அடுத்த வாரம் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைளின் தரவரிசைகள் வெளியிடப்பட், போட்டி அட்டவணை தயாராகியுள்ளது. நடாலுக்கு 3-ம் நிலை கொடுக்கப்பட்டுள்ளது. ரோஜர் பெடரருக்கு 2-ம் நிலை கொடுக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்கா ஓபன் ஆகிய கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் உலகத் தரவரிசை அடிப்படையில்தான் தரநிலை வழங்கப்படும். ஆனால், விம்பிள்டனில் மட்டும் கிராஸ் கோர்ட்டில் விளையாடியதை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கு ரபெல் நடாலுக்கு 3-வது இடமும், 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரருக்கு 2-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நடால் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து ரபெல் நடால் கூறுகையில் ‘‘விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் மட்டுமே இதுபோன்று தரநிலை ஒதுக்கப்படுகிறது. நான் 3-வது தரநிலைக்குப் பதிலாக 2-வது இடம் பிடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், அவர்கள் எனக்கு 3-வது இடம் கொடுத்துள்ளார்கள். இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு கடுமையாக போராட வேண்டும். நான் தொடரில் வெற்றி பெறுவேன்’’ என்றார்.
    Next Story
    ×