search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இந்த உலகக்கோப்பை இவர்களுக்கானது: விக்கெட்டுக்களை அள்ளும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள்
    X

    இந்த உலகக்கோப்பை இவர்களுக்கானது: விக்கெட்டுக்களை அள்ளும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள்

    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை சாய்த்து வருகின்றனர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவற்கு முன் ஆல்ரவுண்டர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கான தொடராகத்தான் இருக்கும். பந்து வீச்சாளர்கள் திண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்று கிரிக்கெட் விமர்சகர்களால் கணிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், இங்கிலாந்தில் திடீரென எதிர்பாராத விதமாக மழை பெய்ததால், ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு போதுமான அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தது, குறிப்பாக முதல் 15 ஓவரில் ஆதிக்கம் செலுத்தினர்.

    இந்த உலகக்கோப்பை தொடரில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 7 ஆட்டத்தில் 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அவர் இரண்டு முறை நான்கு விக்கெட்டுக்களும், ஒரு முறை ஐந்து விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

    பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அமிர் 6 ஆட்டத்தில் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். இவர் ஒரு முறை ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். வங்காள தேச அணியின் முஷ்டாபிஜூர் ரஹ்மான் 6 போட்டியில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் 6 போட்டியில் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் 6 போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஷாகிப் அல் ஹசன் 6 பேட்டியில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதில் ஒருமுறை ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.

    வலது கை வேகப்பந்து வீச்சாளர்களில் இங்கிலாந்தில் ஜாபர் ஆர்சர் 16 விக்கெட்டும், நியூசிலாந்தின் பெர்குசன் 15 விக்கெட்டும், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 13 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
    Next Story
    ×