search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் அணி
    X
    உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் அணி

    7-ல் ஒன்றில் மட்டுமே வெற்றி: அரையிறுதி வாய்ப்பை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்

    இந்தியாவிடம் தோல்வியடைந்ததால் உலகக்கோப்பைக்கான அரையிறுதி வாய்ப்பை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.
    வெஸ்ட் இண்டீஸ் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடனும் (ஹோல்டர், காட்ரெல், தாம்சன், கீமர் ரோச், கேப்ரியல், அந்த்ரே ரஸல்), முன்னணி அதிரடி பேட்ஸ்மேன்களுடனும் (கிறிஸ் கெய்ல், லிவிஸ், ஹெட்மையர், பிராத்வைட், ஷாய் ஹோப்) உலகக்கோப்பை தொடரில் களம் இறங்கியது.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அசத்தல் வெற்றியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடுமையாக போராடி 15 ரன்னிலும் தோல்வியடைந்தது.

    முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என கருதப்பட்டது. அதன்பின் தொடர் தோல்வியால் அரையிறுதி வாய்ப்பு மங்கியது.

    நேற்று மான்செஸ்டரில் இந்தியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றில் பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் எந்தவித போராட்டமும் இல்லாமல் தோல்வியை சந்தித்தது.

    அரையிறுதி வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ்

    இதனால் 7 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, ஒரு போட்டியில் முடிவு இல்லை ஆகியவற்றின் மூலம் 3 புள்ளிகளுடன் பரிதாபமாக அரையிறுதி வாய்ப்பை இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அடுத்து இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்கிறது.

    இலங்கையை வீழ்த்தினால், அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை பறித்துவிடும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
    Next Story
    ×