search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பாகிஸ்தாான் முன்னாள் வீரர் பாசித் அலி
    X
    பாகிஸ்தாான் முன்னாள் வீரர் பாசித் அலி

    இந்தியா வேண்டுமென்றே வங்காள தேசம், இலங்கையிடம் தோற்கலாம்: பாசித் அலி

    பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுவதை விரும்பாத இந்தியா, வங்காள தேசம் மற்றும் இலங்கையிடம் வேண்டுமென்றே தோற்கலாம் என முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தான் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றின் மூலம் 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். ஆஸ்திரேலியா மட்டுமே முதல் அணியாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

    பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை முதல் 5 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று பரிதாபமான நிலையில் இருந்தது. ஒரு போட்டியில் மழையால் கைவிடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது.

    இருப்பினும், கடைசியாக நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் உற்சாகமடைந்துள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தானையும், வங்காள தேசத்தையும் எதிர்கொள்கிறது. இரண்டிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும்.

    இந்திய கிரிக்கெட் அணி

    ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் முதன் மூன்று இடங்களை எளிதில் பிடித்துவிடும் என தெரிகிறது. நான்காவது இடத்திற்கான போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் அணிகள் உள்ளன. மற்ற அணிகள் அடுத்து வரும் போட்டிகளில் மோசமாக விளையாடி தோற்றால் அது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடியும்.

    இந்திய அணி அடுத்து இங்கிலாந்து, இலங்கை மற்றும் வங்காள தேசம் அணிகளை எதிர்கொள்கிறது. மூன்று அணிகளையும் இந்தியா வீழ்த்தும் பட்சத்தில் அது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடியும். இந்திய அணி இந்த மூன்று அணிகளிடம் மோசமாக தோற்கும் பட்சத்தில் அது பாகிஸ்தானுக்கு பாதகமாக முடியும்.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதை தடுக்கும் நோக்கில் இலங்கை, வங்களாதேசம் அணிகளுடனான போட்டிகளில் இந்திய அணி வேண்டுமென்றே மோசமாக விளையாடி தோற்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது. இந்திய அணிக்கு அடுத்ததாக வங்களா தேசம் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகள் உள்ளன. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா எப்படி வென்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் பார்த்தோம்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    அதேபோன்று அடுத்து வரும் போட்டிகளில் அவர்கள் விளையாடினால், என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் என்ன நடந்தது? இந்தியா வேண்டுமென்றே மோசமாக விளையாடியது. இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா எப்படி விளையாடியது? வார்னர் இந்தியாவுக்கு எதிராக வேண்டுமென்றே மோசமாக விளையாடினார்?’’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
    Next Story
    ×