search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வெற்றி மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள்.
    X
    வெற்றி மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.
    இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் 39-வது லீக் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் கருணாரத்னே, குசால் பேரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கருணாரத்னே 32 ரன்களும், பெரேரா 64 ரன்களும் சேர்த்து நல்ல தொடக்கம் அமைத்தனர்.

    அடுத்து வந்த அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி 103 பந்தில் 104 ரன்கள் குவித்ததார். திரிமானே ஆட்டமிழக்காமல் 33 பந்தில் 45 ரன்கள் விளாச இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்துள்ளது. குசால் மெண்டிஸ் 39 ரன்களும், மேத்யூஸ் 26 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 339 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கிறது. தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், சுனில் அம்பரீஷ்சும் ஆடினர். அம்பரீஷ் 5 ரன்னிலும், கெயில் 35 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

    அடுத்து வந்த ஹோப்  (5) ஹெட்மேயர் (29) ரன் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தனர். பின்னர் களம் வந்த நிக்கோலஸ் பூரானும், ஆலனும் ஜோடி சேர்ந்து  அதிரடியாக ஆடிய ரன் சேர்த்தனர். ஆலன் 51 ரன் அடித்திருந்த போது எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். பூரான் களத்தில் இருக்கும்வரை வெஸ்ட் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. பூரான் 118 ரன் அடித்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×