search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்
    X

    புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்

    வோயுதம்பாளையத்தில் வரலாற்று சிறப்புடைய புகழிமலை பாலசுப்பிர மணிய சுவாமி கோயிலில் இரண்டு நாள் தைப்பூச தேரோட்டம் நடந்தது.
    வோயுதம்பாளையத்தில் வரலாற்று சிறப்புடைய புகழிமலையில் பாலசுப்பிர மணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச தேர் திருவிழா இரண்டு நாட்களுக்கு வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூச தேர் திருவிழா கடந்த 3ம் தேதி கொடி ஏற்றுதலுடன் தொடங்கியது. பின்னர் தொடர்ந்து 7ம் தேதி வரை கட்டளைதாரர் மண்டகப்படியும், 8ம் தேதி சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.பின்னர் முதல் நாளான 9ம் தேதி தைப்பூசத்தை முன் னிட்டு காலை முதல் பாலசுப்பிர மணிய சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு வாசணை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து மாலை தேர் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி தொடங்கியது. பாலசுப்பிரமணிய சமேத வள்ளி, தெய்வானை சுவாமிகள் அமர்ந்திருந்த அலங்கரிக்கப்பட்ட தேரை கோயில் செயல்அலுவலர் சூரியநாராயணன், கரூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் திருவிகா, புஞ்சை புகழூர் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி, விஏஓ முருகேசன், தோட்டக்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தலைவர் பெரியண்ணன், அதிமுக நகர செயலாளர்கள் காகிதபுரம் சதாசிவம், புஞ்சை புகழூர் சரவணன், தோட்டக்குறிச்சி அன்பழகன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பொதுமக்கள் தேரை மலைவீதியில் இருந்து “அரோகரா, அரோகரா’’ கோ‌ஷம் முழங்க காந்திநகர் வரை இழுத்து வந்து நிலை நிறுத்தினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

    இரண்டாம் நாளான நேற்று(10ம்தேதி) மறு தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் காந்தி நகரில் நிலை கொண்டிருக்கும் தேரை பக்தர்கள் கந்தம்பாளையம் வழியாக மலை அடிவாரத்திற்கு இழுத்து வந்து நிலை நிறுத்தினர். இன்று (11ம் தேதி) குதிரை வாகன மண்டகப்படியும், நாளை கொடி இறக்கம், 13ம் தேதி விடையாத்தி, 14ம் தேதி சுத்து புன்யாகம் ஆகியவற்றுடன் திருவிழா நிறைவடைகிறது.

    தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேற்று காலை முதல் தீர்த்தகாவடி, பால் காவடி, இளநீர் காவடி, மயில்காவடி ஆகிய வைகளை எடுத்து வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    தேர் திருவிழாவை முன்னிட்டு தைப்பூச அன்னதான கமிட்டி தலைவர் சவுடாம்பிகா கல்வி நிறுவனம் ராமமூர்த்தி, துணை தலைவர் ராஜூ, செயலாளர்கள் குமரன் குடில் கார்த்திகேயன், வக்கீல் சிதம்பரன், பொருளாளர் முனுசாமி, சுமங்கலி செல்வராஜ் உட்பட அன்ன தான குழு நிர்வாகிகள் மேற் பார்வையில் 18ம் ஆண்டாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    எஸ்பி ராஜசேகரன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. இளங்கோ மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கீதாஞ்சலி, அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜய குமார், மதுவிலக்கு பிரிவு இன்ஸ் பெக்டர் சந்தோஷ்குமார் ஆகி யோர் தேர் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இதில் வேலாயுதம் பாளையம் உட்பட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×