search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீ முஷ்ணம் பூவராகசாமி கோவில் தேரோட்டம்
    X

    ஸ்ரீ முஷ்ணம் பூவராகசாமி கோவில் தேரோட்டம்

    ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராக சாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் வைஷ்ணவ தலங்களில் சிறப்பு பெற்றதாகும். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்துநாள் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

    அதில் ஏழாவது நாள் தேர்திருவிழா வர்த்தக சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்தஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிவீதி உலாநடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    அதனை முன்னிட்டு இன்று அதிகாலை பூவராகபெருமாள் மற்றும் அம்புஜவல்லி தாயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடந்து உற்சவர் சாமிகளான எக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவி தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பின்னர் தேரில் வீற்றியருளச்செய்தனர்.

    இதையடுத்து வாண வேடிக்கை மேளக்கச் சேரியுடன் தேரோட்டம் தொடங்கியது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்திபரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்,

    விழாவையெட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்கலால் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

    19-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர் கலந்து கொள்கின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×