search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற நிர்வாகிகள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்
    X

    கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசிய போது எடுத்த படம்.

    பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற நிர்வாகிகள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்

    • அமைச்சர் நமச்சிவாயத்தின் பேச்சால் பரபரப்பு
    • முதல் அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம், சாய்.ஜெ. சரவணன் குமார்,

    பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

    முன்னாள் தலைவர் தாமோதரன், மூத்த நிர்வாகி இளங்கோ, அசோக் பாபு எம்.எல்.ஏ, மாநில துணைத் தலைவர்கள் தங்க விக்ரமன், ;இளங்கோ, செல்வம் ரவிச்சந்திரன, அருள்முருகன், முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், மாநில செயலாளர்கள் ரத்தினவேல், அகிலன், நாகராஜ், லதா ஜெயந்தி, சகுந்தலா, மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி பட்டியலின தலைவர் தமிழ்மாறன், விவசாய அணி தலைவர் புகழேந்தி ஓ.பி.சி அணி தலைவர் சிவகுமார், மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி மற்றும் மாநில பிரிவு அமைப்பாளர்கள். மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் புதுவை மாநிலத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் கட்சி பணி செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு கிளையிலும் உள்ள செல்வாக்கு மிக்க வர்களை நேரில் சந்தித்து 9 ஆண்டுகால பிரதமரின் சாதனை புத்தகத்தை வழங்கி அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும். ஒவ்வொரு கிளையிலும் 5-க்கும் மேற்பட்ட தாமரை சின்னங்கள் வரைய வேண்டும்.

    ஒவ்வொரு கிளையிலும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் மக்களின் நீண்ட கால தேவைகளை கண்டறிய வேண்டும். ஒவ்வொரு சக்தி கேந்திரத்திலும் அனைத்து நிர்வாகிகளையும் ஒன்று திரட்டி சாதனை தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டும்.

    கட்சி நிர்வாகிகளின் குறை களையும் ஆலோசனைகளையும் பதிவு செய்து மாநில நிர்வாகிகள் தலைமைக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.

    புதுவையில் முதல் அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

    கூட்டணியில் அ.தி.மு.க.வும் இடம் பெற்றுள்ளது. மேலும் பாராளுமன்ற தேர்தலு க்கான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கான பூர்வாங்க பணிகள் கூட நடைபெறவில்லை.

    இந்த நிலையில் தேர்தலில் கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு என கூறாமல் பா.ஜனதா வேட்பாளர் வெற்றிக்கு நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் நமச்சிவாயம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் நமச்சிவாயத்தின் பேச்சு தேர்தலில் பா.ஜனதாதான் போட்டியிட உள்ளதை உறுதி செய்வதாகவும் உள்ளது. இது கூட்டணிக்குள் சலசலப்பையும் உருவாக்கி உள்ளது.

    Next Story
    ×