search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொழிற்சாலை விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்
    X

    முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளிக்கப்பட்ட காட்சி.

    தொழிற்சாலை விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சுயேட்சை எம்.எல்.ஏ. மனு
    • நிறுவனத்தின் பல சட்டவிரோத செயல்களை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் பொதுநல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இன்று சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர்? அவர்களின் சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட 400 டன் உற்பத்தியை விட அதிகமாக 650 டன் வரை உற்பத்தி செய்ததே விபத்துக்கு காரணம்.

    ஆபத்தான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் தலைகவசங்களை வழங்கவில்லை. அரசு அதிகாரிகள் இதை கண்காணிக்கவில்லை.வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தகளை இங்கு தயாரித்துள்ளனர்.

    இதன் மூலப்பொருட்கள் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. நிறுவனத்தின் பல சட்டவிரோத செயல்களை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

    இதை தட்டிக்கேட்டவர்கள் கூலிப்படையினரால் மிரட்டப்பட்டுள்ளனர். 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இங்கு 10 சதவீத உள்ளூர் தொழிலாளர்களுக்குகூட வேலை வழங்கவில்லை.

    நிலத்தடி நீர் மாசுபட்டு பொதுமக்கள் பலர் பலவித நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள பாய்லர்கள் வெடித்தால் பெரும் விபத்து ஏற்படும். காலாப்பட்டு பகுதி கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள், குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுவர்.தற்போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை தொழிலாளர் உட்பட 2 பேர் இறந்துள்ளனர்.

    எனவே நிறுவனத்தின் உரிமையாளர், நிர்வாக இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நிறுவனத்துக்கு சீல் வைக்க வேண்டும். மருந்து நிறுவனம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். அப்பகுதியில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    Next Story
    ×