என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு
- அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் பெரு மன்றம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் நிரந்தர மற்றும் நிலையான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் நிரந்தர மற்றும் நிலையான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை எடுக்கும் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பல்வேறு அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மறைமலையடிகள் சாலை சுப்பையா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் அந்தோணி முன்னிலை வகித்தார். சி.பி.ஐ. மாநில செயலாளர் சலீம், மாநில துணை செயலாளர் எழிலன், துணை தலைவர் எரிக்ரேம்போ, ரவீந்திரன், சசிதரன், பழனி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நிர்வாகிகள் சுகதேவ், ரஞ்சித், யசோதா, ராமசாமி, முருகன், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.