search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வேளாண் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
    X

    காரைக்கால் பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி தாளாளர் கணேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.

    வேளாண் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

    • பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி தாளாளர் கணேஷ் நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
    • மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவ தற்கும் ரூ. 6 லட்சம் நன்கொ டையாக வழங்கினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பண்டிதர் ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா மற்றும் கல்லூரி நிறுவன நாள் கொண்டாட்டம் நடந்தது.

    பேராசிரியர் நடராஜன் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மாணவர்கள் மன்ற ஆலோசகர் நாராயணன் விழா குறித்து முன்னுரை வழங்கினார். பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி தாளாளர் கணேஷ் நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் புதுவை சட்டப்பேரவை செயலாளர் தயாளன், வருவாய் அதிகாரி மற்றும் நிர்வாக மேஜிஸ்ட்ரேட் அருள் அய்யாவு, கேரளா தலைமை வன பாதுகாப்பு அதிகாரி ஜஸ்டின் மோகன், சென்னை கல்வித்துறை செயலாளர் ஜெயந்தி, புதுடெல்லி வெளியுறவுத்துறை அமைச்சகத் துணைச் செயலர் சந்துரு, அப்பர் வேளாண் துறை அலுவலர் மற்றும் கல்லூரி பேராசி ரியர் மாவட்ட கலெக்டர்கள், வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரி கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவ தற்கும் ரூ. 6 லட்சம் நன்கொ டையாக வழங்கினர்.

    இறுதியாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    Next Story
    ×