search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை
    X

    கென்னடி எம்.எல்.ஏ. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை வழங்கிய காட்சி.

    மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை

    • புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
    • அப்போது பயனாளி களிடம் தற்போது வழங்க ப்படும் உதவித்தொகையை 30 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

    அப்போது பயனாளி களிடம் தற்போது வழங்க ப்படும் உதவித்தொகையை 30 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்காக வருகின்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும் என்று கூறினார்.

    இந்நிகச்சியில் துறை அதிகாரிகள், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி ராஜி, மாநில மீனவர் அணி விநாயகம், கிளைச் செயலாளர் செல்வம், சங்கர நாராயணன், காலப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×