search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பஸ் நிலையத்திற்கு மாற்று இடம்
    X

    கோப்பு படம்.

    பஸ் நிலையத்திற்கு மாற்று இடம்

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது.
    • திய பஸ்நிலைய திட்டம் ஷாப்பிங் மால் போல கட்டப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ராஜசேகர், தண்டபாணி, ஹரி, சசி, ஜெயபிரகாஷ், ராம்சங்கர் ஆகியோர் முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம்அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது. பஸ்நிலையத்தின் ஒரு பகுதி இடிக்கும் பணி நடக்கிறது. பஸ்நிலையத்துக்கு நாள்தோறும் 750 பஸ்கள் வந்து செல்வது கடினமாக உள்ளது.

    புதிய பஸ்நிலைய திட்டம் ஷாப்பிங் மால் போல கட்டப்படுகிறது. பயணிகள், பஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கா மல், வணிக நோக்கில் 3 அடுக்கு மாடி கடைகள் ஆக்கிரமிக்கும் வகையிலும், பிளாட்பாரம் 22 பஸ்கள் நிறுத்தும் வகையிலும் சிறிதாக உள்ளது.

    திட்ட கூட்டங்களில் பஸ் உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்காததால் இந்த குறைகள் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்தை யொட்டி உள்ள பி.ஆர்.டி.சி. பணி மனையை கிழக்கு கடற்கரை சாலையில் பஸ் நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு மாற்றி பி.ஆர்.டி.சி. டெப்போவை தற்காலி பஸ்நிலைய பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம். சென்னை செல்லும் பஸ்கள் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக டெப்போவுக்கு மாற்றலாம்.

    இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

    Next Story
    ×