என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலி
- புதுவையில் ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது
- புதுவையில் 73, காரைக்காலில் 31, ஏனாமில் 15 பேர் என புதிதாக 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதுவையில் 73, காரைக்காலில் 31, ஏனாமில் 15 பேர் என புதிதாக 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 5, காரைக்கால், ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 603, காரைக்காலில் 105, ஏனாமில் 43, மாகேவில் ஒருவர் என 752 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 69, காரைக்காலில் 27, ஏனாமில் 2 பேர் என 98 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை குருசுகுப்பத்தை சேர்ந்த 79 வயது முதியவர் ஜிப்மரில் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். நேற்றும் கருமாம்பாக்கத்தை சேர்ந்த முதியவர் பலியானார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 967 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 18 லட்சத்து 50 ஆயிரத்து 190 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.