search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சமுதாய கல்லூரியில் சேர விண்ணப்பம்
    X

    கோப்பு படம்.

    சமுதாய கல்லூரியில் சேர விண்ணப்பம்

    • புதுவை பல்கலைக்கழக சமுதாய கல்லூரியின் முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
    • லாஸ்பேட்டையில் புதுவை பல்கலைக்கழகத்தின் சமுதாய கல்லூரி இயங்கி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக சமுதாய கல்லூரியின் முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    லாஸ்பேட்டையில் புதுவை பல்கலைக்கழகத்தின் சமுதாய கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு இந்த ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சமுதாய கல்லூரியின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள மாணவர் சேர்க்கையில் பங்கேற்று பயன்பெறலாம்.

    இங்கு கற்பிக்கப்படும் இளங்கலை, முதுநிலை பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்புகள் பற்றிய விபரங்கள் இணைய தளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

    Next Story
    ×