search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் கலைஞர்கள் மலரஞ்சலி
    X

    சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்கட்சி தலைவர் சிவா, நடிகர் நாசர் ஆகியோர் மரியாதை செலுத்திய காட்சி.

    சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் கலைஞர்கள் மலரஞ்சலி

    • அமைச்சர் லட்சுமிநாராயணன், நடிகர் நாசர் பங்கேற்பு
    • ரசின் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்தநாள் கொண்டா டப்பட்டு, நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    தமிழ் நாடகத் தந்தை, தமிழ் நாடக மறுமலர்ச்சியா ளர் என அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடகத்தை தனது மூச்சாக கொண்டு 63 நாட கங்களை அரங்கேற்றியவர்.

    புதுவையில் மறைவு எஸ்.ஜி.கிட்டப்பா, பி.கே.சண்முகம் சகோத ரர்கள், எம்.ஆர்.ராதா போன்ற முன்னணி நடி கர்களை அறிமுகப்படுத்தி யவர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் தனது இறுதி காலத்தை புதுவையில் கழித்தார்.

    புதுவையில் 1922-ம் ஆண்டு நவம்பர் 13-ம் நாள் சங்கராதாஸ் சுவாமிகள் மறைந்தார். அவரது உடல் கருவடிக்குப்பம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு ள்ளது.

    புதுவை அரசின் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்தநாள் கொண்டா டப்பட்டு, நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் 101- வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. புதுவை வேதபுரீஸ்வரர் கோவில் அருகில் இருந்து அவரது உருவப் படத்துடன் கலைஞர்களின் ஊர்வலம் நடந்தது

    ஊர்வலத்தில் காளி ஆட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், மானாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் காந்தி வீதி வழியாக கருவடிக்குப்பம் சுடுகாட்டை அடைந்தது. அங்கு உள்ள நினைவு மண்டபத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

    அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, நடிகர் சங்க தலைவர் நாசர், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலா ளர் சலீம், முன்னாள்

    எம்.எல்.ஏ. நாரா.கலை நாதன் மேற்றும் சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்த்த நாடக கலைஞர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×