search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிம்ஸ் மருத்துவமனை சுகாதார மையத்தில் இலவச மருத்துவ முகாம்
    X

    பிம்ஸ் மருத்துவமனை சுகாதார மையத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்த போது எடுத்த படம்.

    பிம்ஸ் மருத்துவமனை சுகாதார மையத்தில் இலவச மருத்துவ முகாம்

    • முகாமினை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் தொடங்கி வைத்தார்.
    • 87பேர் மேல் சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவ மனைக்கு பரிந்து ரைக்கப்படனர்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவமனை சூனாம்பேடு சுகாதார மையத்தில் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட தேவாலயத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மருத்துவமனையின் மருத்துவ துறை மற்றும் பிம்ஸ் சுகாதார மையம் இணைந்து இலவச மருத்துவ முகாமினை

    நடத்தியது. முகாமினை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் தொடங்கி வைத்தார். அருட் தந்தை ஜோபி ஜார்ஜ் முன்னிலை வகித்தார்.ஊர் துணை தலைவர் தெய்வசிகாமணி, மற்றும் பழனி, ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    முகாமில் மருத்துவர்கள் பீட்டர் பிரசாந்த், அச்சு ஜார்ஜ், ஹெனா உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதில் 87பேர் மேல் சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவ மனைக்கு பரிந்து ரைக்கப்படனர். 97பேருக்கு சர்க்கரை பரிசோதனை மற்றும் 8 பேருக்கு கர்ப்ப பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 47 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×