என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஆரோவில்லில் வெளிநாட்டினர் திரண்டதால் பரபரப்பு
- ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடையஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரத்தை அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கினார்.
- வெளிநாட்டினர் அந்தப் பணியை தடுத்து நிறுத்தி அவர் அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்தனர்.
புதுச்சேரி:
ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடையஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரத்தை அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கினார்.
ஒரு பகுதியில் சுற்றுச் சுவர் கட்டி அதில் விவசாயம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக மற்றொரு இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜே.சி.பி. இயந்திர மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அந்தப் பணியை தடுத்து நிறுத்தி அவர் அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்தனர்.
இதுகுறித்து சுப்பிரமணியன் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் வாங்கிய இடத்திற்கு முறைப்படியான ஆவணங்கள் வைத்துள்ளார். மேலும் இந்த ஆதாரங்களை சுப்பிரமணியன் ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாகத்திடமும் வருவாய் துறையிடமும் அந்த ஆவணங்களை வழங்கி உள்ளார்.
இன்று அவர் மீண்டும் பணியாளர்களை வைத்து இடத்தை சுத்தம் செய்ய முற்பட்ட போது மரங்களை வெட்டக்கூடாது என கூறி 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களை வலுக்கட்டயமாக வெளியேற்றினர்.
இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் வந்து இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்த இடம் பிரச்சினை தொடர்பாக வெளிநாட்டவர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.