search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காலாப்பட்டு போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை
    X

    அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் டி.ஜி.பி.யிடம் மனு அளித்த காட்சி.

    காலாப்பட்டு போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை

    • டி.ஜி.பி.யிடம் அ.தி.மு.க. மனு
    • இதுவரை தீ விபத்துக்கு காரணமான வர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் டி.ஜி.பி.யை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பெரியகாலாப்பட்டில் உள்ள மருந்து தொழிற்சாலை விபத்தில் 15 பேர் 50 சதவீதத்துக்கும் அதிகமான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 2 தொழிலாளர்கள் மரண மடைந்தனர். தொழிற்சாலை நிர்வாகம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த உண்மைகளை மறைக்கிறது.

    நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசும், போலீஸ் அதிகாரி களும் மவுனம் காக்கிறார் களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    மேலும், தொழிற்சாலை யின் சட்டவிரோத செயலுக்கு மறைமுகமாக அரசு ஆதரவளிப்பது போல் தெரிகிறது.

    விபத்து ஏற்பட்டவுடன் காலாபட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை தீ விபத்துக்கு காரணமான வர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. காலாப்பட்டு போலீசார் நடவடிக்கை குறித்து விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மனித இழப்பு மற்றும் காயமடைந்த நபர்களை பற்றி அரசோ, நிர்வாகமோ கவலைப்படவில்லை. 16 வயது சிறுவன் எப்படி நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டான் .? என்பது தெரியவில்லை. எனவே இதுதொடர்பாக தொழிற்சாலை நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அப்போது மாநில துணை தலைவர் ராஜாராமன், இணைச் செயலாளர் கணேசன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணைச் செயலாளர்கள் நாகமணி ஜெயசேரன், காந்தி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில ஜெ.பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×