search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாய்க்கால் மற்றும் சாலை மேம்பாட்டு பணி
    X

    கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

    வாய்க்கால் மற்றும் சாலை மேம்பாட்டு பணி

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    • பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு வந்தார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை பகுதியை சார்ந்த நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகிலுள்ள குறுக்கு வீதியில் 30 வருட காலமாக மழையால் அப்பகுதி பொதுமக்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வந்தனர். மழைக் காலங்களில் அப்பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நிரம்பி விடும். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு வந்தார்கள். இதையடுத்து அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர். அவர் சட்டமன்ற நிதியின் கீழ் நகராட்சி மூலம் அப்பகுதியில் ப-வடிகால் மற்றும் சாலைகளை மேம்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.

    அதன்படி தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதிக்கு அருகில் உள்ள குறுக்கு வீதிக்கு ப-வடிவ வாய்க்கால் மற்றும் தற்போதுள்ள சிமெண்ட் சாலையை மேம்படுத்துவதற்கான பூமி பூஜையை ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டுமான பணியினை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்பணியினை தி.மு.க. நிர்வாகிகள் உடன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி துணைப்பொறி யாளர் பிரபாகரன், என்ஜினீயர் சண்முகசுந்தரம், தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர்கள் செல்வம், ராகேஷ் மற்றும் ரவிக்குமார் , ஊர் பொதுமக்கள் சகாயராஜ், வெங்கடேஸ்வரன், கணேசன், நடேசன், சிவக்குமார், முனுசாமி, ஜான், செங்கேணி, சுமதி, தமிழ்செல்வி, வசந்தா , ரகுமான் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×