search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொழிலாளர் நலத்துறையில் வேலை வாய்ப்பு முகாம்
    X

    கோப்பு படம்.

    தொழிலாளர் நலத்துறையில் வேலை வாய்ப்பு முகாம்

    • 10 மற்றும் 12 வகுப்பு முடித்தவர்கள், டிப்ளமோ ஐ.டி. மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள், முதுகலை படித்தவர்கள் வந்திருந்தனர்.
    • இளைஞர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக நேர்காணல் நடத்துவர்கள் செல்போன் வெளிச்சம், சிறிய எமர்ஜென்சி விளக்கை வைத்து நேர்காணலை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் காந்திநகர் வேலைவாய்ப்பு மையத்தில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி வேலைவாய்ப்பு முகாம் தொடங்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு புதிதாக பட்டம் படித்தவர்கள்,10 மற்றும் 12 வகுப்பு முடித்தவர்கள், டிப்ளமோ ஐ.டி. மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள், முதுகலை படித்தவர்கள் வந்திருந்தனர். புதுவை, தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றன. இன்று காலை 9 மணி முதல் காந்தி நகர் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கூடியிருந்தனர்.

    அப்போது காலை 10 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இருட்டில் இளைஞர்கள் முகாமில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    இளைஞர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக நேர்காணல் நடத்துவர்கள் செல்போன் வெளிச்சம், சிறிய எமர்ஜென்சி விளக்கை வைத்து நேர்காணலை நடத்தினர்.

    அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என அறிக்கப்பட்டும், மின் துணைப்பு துண்டிக்க ப்பட்டது இளைஞர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

    Next Story
    ×