என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதுவையில் முக கவசம் கட்டாயம்-கலெக்டர் உத்தரவு
- புதுவையில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்ப ட்டுள்ளது.
- மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்ப ட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வல்லவன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
உலக நாடுகளில் புதிய வகை கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுவையில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டுலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.
மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 1-ந் தேதி அதிகாலை ஒரு மணிக்குமேல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உணவகங்கள், ஓட்டல்கள், பார்கள், மதுபான கடைகளில் தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது மற்றும் 2 தவணை தடுப்பூசிகள் போட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிக ளுக்குச் செல்லும்போது அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள்மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தனியார் கடைகள் மாற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளனர் என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் முன்பு பின்பற்றிய கொரோனா தடுப்புக்குரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனாவை தடுக்க புதுவையில் 8 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் வல்லவன் கூறும்போது, புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் 450 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் வசதி, 2 ஆயிரம் ஸ்டெபிலைசர்கள், 125 வென்டிலேட்டர் வசதி செய்யப்பட்டு ள்ளது. தனியார் மருத்துவ மனையிலும் பரிசோத னைகள் மேற்கொ ள்ளப்படும். ஜினோம் பரிசோதனை புதுவையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. பொதுமக்கள் பீதியடையாமல், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி உட்பட கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்