search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்
    X

    கோப்பு படம்.

    மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்

    • அனைத்து தொழிற்சங்கத்தினர் முடிவு
    • பா.ஜனதா அரசை கண்டித்தும் வருகிற 28-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை சி.ஐ.டி.யூ. மாநில குழு அலுவலகத்தி நடந்தது.

    சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் சீனுவாசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் பிரபுராஜ், துணைத்தலைவர் முருகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொருளாளர் அந்தோணி, ஐ.என்டி.யூ.சி. பொதுச் செயலாளர் ஞானசேகரன், துணைத் தலைவர் சொக்கலிங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யூ. பொதுச் செயலாளர் புருஷோத்தமன்,

    எல்.எல்.எப். செயலாளர் செந்தில், எம்.எல்.எப். செயலாளர் வேதா வேணுகோபால், மாநில தலைவர் மாசிலாமணி, என்.டி.எல்.எப் பொது செயலாளர் மகேந்திரன், பிற தொழிற்சங்க நிர்வாகி கள் சங்கர், ராமமூர்த்தி, லிக்காய் , சரவணன், குண சேகரன், தினேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தொழிலாளர் விரோத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், கொடுத்த வாக்கு றுதியை நிறை வேற்றாத புதுவை என்.ஆர்..காங்கிரஸ், பா.ஜனதா அரசை கண்டித்தும் வருகிற 28-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தை விளக்க வருகிற 25, 27-ம் தேதிகளில் சேதராப்பட்டு, முதலியார்பேட்டை, பாகூரில் தெரு முனைக்கூட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

    Next Story
    ×