search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாகூரில் இடிமின்னலும் பலத்த மழை
    X

    தகவல் அறிந்த மின் ஊழியர்கள் பாகூர் பைபாஸ் ரோட்டில் உள்ள மின்கம்பத்தை விடிய விடிய சரி செய்த காட்சி.

    பாகூரில் இடிமின்னலும் பலத்த மழை

    • மின்சாரம் இன்றி மக்கள் அவதி
    • பைபாஸ் ரோட்டில் இடி தாக்கி மரம் விழுந்து மின் ஓயர்கள் அறுந்து விழுந்தது.

    புதுச்சேரி:

    பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. அவ்வப்போது வெயிலும் அடித்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு இடி,மின்னல் சூறை காற்றுடன் கனமழை பெய்தது.

    பாகூர் பைபாஸ் ரோட்டில் இடி தாக்கி மரம் விழுந்து மின் ஓயர்கள் அறுந்து விழுந்தது.

    மேலும் அதில் உள்ள இன்சுலேட்டர்கள் பல சேதமாகின. இதேபோல் கிருமாம்பாக்கம் பகுதியிலும் மின்ஓயர் அறுந்து சேதமானது. தகவல் அறிந்த மின் ஊழியர்கள் பாகூர் பைபாஸ் ரோட்டில் உள்ள மின்கம்பத்தை விடிய விடிய சரி செய்தனர்.

    இதனால் இரவு 10 மணியிலிருந்து 2 மணி வரை மின்சாரம் இன்றி பொது மக்கள் தவி த்தனர். இரவில் மழையை பொருட்படுத்தாமல் துரிதமாக செயல்பட்ட ஊழியர்களை பொது மக்கள் சமூக வலை தளங்க ளில் பாரா ட்டி யுள்ள னர்.

    பாகூ ரில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 2 செமீ. மழை பதிவா கியுள்ளது.

    பாகூரில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையின் அளவு 5செமீ. ஆகும்.

    Next Story
    ×